Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2024 ஒக்டோபர் 27 , பி.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல பாலிவுட் ஹிட் பாடலான ‘அமி ஜே டோமர்’ பாடலுக்கு மேடையில் நடனமாடிக் கொண்டிருந்த போது திடீரென நடிகை வித்யாபாலன் தவறி விழுந்தது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
பாலிவுட்டில் ஹிட் நம்பரான ‘அமி ஜே டோமர்’ பாடலுக்கு படத்தின் புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்த நடிகர் நடிகைகள் அதன் ஒரு பகுதியாக மேடையில் நடனமாடினார்கள்.
நடிகைகள் வித்யாபாலனும், மாதுரி தீட்ஷித்தும் படத்தில் இருந்து ‘அமி ஜே டோமர்’ என்ற பாடலுக்கு மேடையில் நடனமாடினார்கள். அப்போது வித்யாபாலன் மேடையில் தவறி விழுந்து விட்டார். உடனடியாக சமாளித்துக் கொண்டு எழுந்த வித்யாபாலன், தனது நடனத்தை மீண்டும் தொடர்ந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் வித்யாபாலனின் சமாளிப்பு திறமையைப் பாராட்டி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .