2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

நடிகர் ரஜினிகாந்த் திடீரென வைத்தியசாலையில் அனுமதி

Freelancer   / 2024 ஒக்டோபர் 01 , பி.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் ரஜினிகாந்த்துக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 

கூலி படப்பிடிப்பில் இருந்தபோது ரஜினிகாந்த்திற்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் அவர் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார், ஒரு சில செய்திகள் ரஜினிகாந்த்திற்கு வயிற்றில் ஏற்பட்ட வீக்கம் தான் இதற்கு காரணம் என செய்திகள் வெளியிட்டு இருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் ரஜினிகாந்த்திற்கு இதயம் சம்பந்தப்பட்ட சிகிச்சை இன்று நடக்கவிருக்கிறது எனவும் செய்தி வெளியாகியிருக்கிறது. மேலும் சூப்பர் ஸ்டாரின் மனைவி ரஜினிகாந்த், அவர் நன்றாக இருப்பதாகவும், பயப்படுவதற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் சொல்லி இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில், ரஜினிகாந்த்துக்கு இருதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் ஒரு வீக்கம் ஏற்பட்டிருந்ததாகவும். அது அறுவை சிகிச்சை இல்லாமல் எளிய முறையில் சரி செய்யப்பட்டு, தற்பொழுது அவர் பூரண நலத்துடன் ஓய்வெடுத்து வருவதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்பலாம் என்றும் மருத்துவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .