Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 ஓகஸ்ட் 23 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிம்பு, தனுஷ் நடித்த படங்கள் உள்பட பல திரைப்படங்களில் நாயகியாக நடித்த மேகா ஆகாஷூக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக புகைப்படங்கள் வெளியாகி உள்ளதை அடுத்து இரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். சிம்பு நடித்த ’வந்தா ராஜாவா தான் வருவேன்’ தனுஷ் நடித்த ’என்னை நோக்கி பாயும் தோட்டா’ உட்பட சில தமிழ் படங்களில் மேகா ஆகாஷ் நடித்துள்ளார் என்பதும் சமீபத்தில் வெளியான விஜய் ஆண்டனியின் ’மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் இவர்தான் நாயகி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மேகா ஆகாஷ் மற்றும் சாய் விஷ்ணு ஆகிய இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
இது குறித்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து, “எனது கனவு நனவாகிவிட்டது, அன்பு, சிரிப்பு மகிழ்ச்சி என்னுடைய வாழ்வில் தொடங்கிவிட்டது” என்று கூறியுள்ளார். இதனை அடுத்து இரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .