Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 ஜூன் 19 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை நயன்தாரா திருமணமான 10 நாட்களில் மீண்டும் திரைப்படத்தில் நடிப்பதற்காக சென்றுள்ளார்.
விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து காதலித்து வந்தனர்.
7 ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன், நயன்தாரா கடந்த 09.06.2022 மகாபலிபுரத்தில் கடற்கரை சாலையில் உள்ள பார்க் ஷெரட்டன் ஸ்டார் ஓட்டலில் பிரமாண்ட கண்ணாடி அரங்கில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்தில் நயன்தாரா பெற்றோர் உடல்நலக் குறைவால் பங்கேற்கவில்லை.இதனால் தன் பெற்றோரை சந்தித்து ஆசி வாங்க தன் கனவருடன் கேரளா சென்றதனையடுத்து, அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அனைவரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
கேரளாவின் முக்கிய கோவில்களுக்கு தன் கணவர் விக்னேஷ் சிவனுடன் சென்ற நயன்தாரா சாமி தரிசனம் செய்தார்.
மேலும், திருமணம் முடிந்த ஒரு சில நாட்களில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி நன்றி தெரிவித்தனர்.
அப்போது செய்தியாளர்கள் ஹனிமூன் எங்கே என்று கேள்வி எழுப்பியதற்கு வெட்கத்துடன் புன்னகை கலந்த சிரிப்புடன் நயன்தாரா பதில் அளிக்கவில்லை.
இந்நிலையில் திருமணம் முடிந்து கேரளா சென்ற நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி அடுத்து ஹனிமூன் செல்வார்கள் என்று ரசிகர்கள் பேசி வந்த நிலையில், நயன்தாரா ஹனிமூன் செல்லாமல் படத்தில் நடிக்க சென்றுள்ளார்.
தற்போது, நயன்தாரா மீண்டும் படப்பிடிப்புகளில் பிஸியாகியுள்ளார். குறிப்பாக நேற்று சிக்கன் தொடர்பான இணையதள விளம்பரத்தின் படப்பிடிப்பில் நேற்று கலந்துகொண்டார்.
அதேபோல் வரும் 25 ஆம் தேதி முதல் ஜவான் திரைப்படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா பங்கேற்க உள்ளார். அதற்கான படப்பிடிப்பு மும்பையில் தொடங்க உள்ளது.
அதற்காக அடுத்த வாரம் மும்பை செல்கிறார். ஜவான் திரைப்படத்தின் நயன்தாராவின் சில காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டிருக்கின்றன.
மீதமிருக்கும் காட்சிகளை மட்டும் தற்போது நடைபெற உள்ள படப்பிடிப்பில் எடுக்க இயக்குனர் அட்லி திட்டமிட்டு இருக்கிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
9 minute ago
19 minute ago