2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

திருப்பிக் கொடுத்த விஜய்

J.A. George   / 2022 செப்டெம்பர் 06 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டா நடித்த ‘லைகர்’ திரைப்படம் படுதோல்வி அடைந்து படக்குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குறிப்பாக இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகை சார்மிக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

கரன் ஜோகர், பூரி ஜெகன்நாத் ஆகியோர்களும் இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் என்றாலும் சார்மிக்கு மிகப்பெரிய நஷ்டம் என்று என்று தெரிகிறது.

சிம்புவின் ’காதல் அழிவதில்லை’ படத்தில் அறிமுகமாகி அதன்பின் ஒருசில தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்து அவர் கடந்த பல வருடங்களாக சேர்த்து வைத்த பணத்தை மொத்தமாக இதில் இழந்துவிட்டார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ‘லைகர்’ பட தோல்வியால் அதிர்ச்சியில் இருந்த சிம்பு பட நடிகை சார்மிக்கு ஆறுதல் கூறும் வகையில், தான் வாங்கிய சம்பளத்தில் ஒரு பெரும் பகுதியை நடிகர் விஜய் தேவரகொண்டா சார்மியிடம் திருப்பி கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

விஜய்தேவரகொண்டா தனது சம்பளத்தின் பெரும்பகுதியை திருப்பிக் கொடுத்து விட்டதால் நஷ்டம் ஓரளவு குறையும் என்று தெரிகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .