Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
J.A. George / 2022 டிசெம்பர் 20 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் திரையுலகின் பிரபல பாடகியான சின்மயி, சில வருடங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது 'மீ டு'பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் கவிஞர் வைரமுத்துவால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சின்மயி, கவிஞர் வைரமுத்துவை சந்தித்த தொலைக்காட்சி நடிகையை எச்சரித்து பதிவிட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நடிகையும், தொகுப்பாளினியுமான அர்ச்சனா சில தினங்களுக்கு முன்பு வைரமுத்துவை சந்தித்த பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அப்பொழுது வைரமுத்து ஆசிர்வாதம் அளிப்பது போன்ற புகைப்படத்தையும் இணைத்திருந்தார்.
இந்நிலையில் நடிகை அர்ச்சனாவின் பதிவுக்கு கருத்து பதிவு செய்துள்ள சின்மயி, துணைக்கு யாரும் இல்லாமல் வைரமுத்துவை சந்திக்க வேண்டாம் என எச்சரித்து பதிவிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago