Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 ஜூலை 09 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ட்விட்டர் நிறுவனம் நடிகர் நடிகைகள், அரசியல்வாதிகள்,விளையாட்டு வீரர்கள், சமூகத்தில் முக்கியமான இடத்தில் உள்ள நபர்களுக்கு ப்ளூ டிக் என்னும் வெரிபைடு பேட்ஜ் வழங்கி வருகிறது.
இதன் மூலம் போலி கணக்குகளை தவிர்க்கவும், சம்பந்தப்பட்ட நபர்களை எளிதாக கண்டுபிடிக்கலாம். மேலும் இது ஒரு அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. பல முக்கிய நபர்களுக்கு கூட இந்த ப்ளூ டிக் கிடைப்பது இல்லை.
இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷின் ப்ளூ டிக்கெட்டை ட்விட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது. பொதுவாக ஆக்டிவாக இல்லாத அக்கவுண்டுகள் மற்றும் அக்கவுண்டின் பெயரை மாற்றினால் இவ்வாறு ப்ளூ டிக் நீக்கப்படும்.
ஆனால் தனுஷ் ப்ளூ டிக் நீக்கப்பட்டதற்கு எந்த ஒரு காரணமும் இதுவரை ட்விட்டர் நிறுவனம் சொல்லவில்லை. கடந்த ஆண்டு தோனியின் அக்கவுண்டில் இருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டு பின்பு சிறிது நேரத்தில் மீண்டும் வழங்கப்பட்டது.
மேலும் அரசியல் பிரபலம் மற்றும் நடிகை குஸ்புவின் ப்ளூ டிக்கும் இதே போல் நீக்கப்பட்டு பின்பு வழங்கப்பட்டது. நேற்று இரவு தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படமான The Gray Man படம் ஜுலை 22ம் திகதி வெளியாகும் என்று அறிவிப்பு வந்தது.
இதனை ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில் தற்போது தனுஷின் ப்ளூ டிக் நீக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின்பு சிறிது நேரத்தில் மீண்டும் ப்ளூ டிக்கை ட்விட்டர் நிறுவனம் வழங்கியது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
42 minute ago
52 minute ago