Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 மே 24 , பி.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேற்று (23) மாலை, நடிகர் சிம்புவின் தந்தையும் திரைத்துறையில் பன்முக திறமையும் கொண்ட டி. ராஜேந்தர் அவர்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், அதனை உறுதி செய்து நடிகர் சிம்பு தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது தந்தைக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாகவே மருத்துவமனையில் அனுமதி செய்திருந்தோம்.
ஆனால், தற்போது அவருக்கு வயிற்றில் சிறிது இரத்த கசிவு ஏற்பட்டதனாலும், உயர் சிகிச்சைகாகவும் வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல இருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தற்போது முழு சுயநினைவுடன் தான் இருக்கிறார் என்றும், கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து உங்கள் அனைவரையும் சந்திப்பார் என்றும் அறிக்கையில் கூறியுள்ளார் சிம்பு.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .