Freelancer / 2023 ஜூலை 18 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி இன்னொரு பக்கம் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே இந்த படத்தின் ’காவாலா’பாடல் மிகப்பெரிய அளவில் வைரல் ஆன நிலையில் ’ஹூக்கும்’என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28ஆம் திகதி பிரமாண்டமாக நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாத நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அதே திகதியில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் ‘ஜெயிலர்’ ரிலீஸ் திகதிக்கு இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கும் நிலையில் இனி வரும் நாட்களில் விறுவிறுப்பான புரமோஷன் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
20 minute ago
32 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
32 minute ago
55 minute ago
1 hours ago