Freelancer / 2021 ஒக்டோபர் 02 , பி.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தனது கணவர் நாக சைதன்யாவை பிரிந்து விட்டதாக அதிகார பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளாகும் நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக பிரியப் போகிறார்கள் என்று வெகுநாட்களாகவே செய்தி உலவுகிறது.
இதுகுறித்து இருவரும் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வந்த நிலையில், சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் தாங்கள் பிரிந்து விட்டதாக அறிவித்திருக்கின்றர்.
அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், நாங்கள் இருவரும் கடந்த 10 வருடங்களாக நட்பாக பழகி வருகிறோம். இந்த நட்பு எங்கள் திருமணம் வரை சென்றது, தற்போது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் எங்கள் முடிவுக்கு இரசிகர்கள், நண்பர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் மதிப்பு கொடுக்கும் படி கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
53 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
1 hours ago