Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
Freelancer / 2024 மே 16 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
2022இல் வெளியான மம்முட்டியின் ‘புழு’ திரைப்படத்திற்கு சிலர் தங்களது எதிர்ப்புகளை தற்போது தெரிவித்து அவர்மீது சைபர் தாக்குதலை தொடுத்து வருகின்றனர்.
ஒருசில வலதுசாரி அமைப்புகளின் வலைதளப்பக்கங்களில் இருந்தும் மம்முட்டிக்கு எதிர்ப்பு கிளம்பிவருகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு மலையாள நடிகர் மம்முட்டி நடிப்பில் ரதீனாவின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘புழு’. இதில் பிராமண சமூகத்தை சேர்ந்தவராக நடித்துள்ளார் மம்முட்டி. இப்படத்தில், மம்முட்டியின் சகோதரி பட்டியலின இளைஞரை காதலித்த நிலையில், அதனை ஏற்று கொள்ள இயலாத மம்முட்டி, இறுதியில் தங்கை, தங்கையின் கணவர் என இருவரின் உயிரையும் பறிப்பதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
இப்படம் வெளியாகி கிட்டதட்ட 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், தற்போது இது எதிர்ப்புகளை பெற்று வருகிறது. வெளியானபோது மக்களின் ஆதரவையும் பாராட்டுகளையும் பெற்ற இப்படம், தற்போது மற்றொரு தரப்பில் கடும் எதிர்ப்பினை சம்பாதித்து வருகிறது.
குறிப்பாக “நடிகர் மம்முட்டியை இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர். அவரது பெயரே, முகமது குட்டி. அப்படியான அவர் குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தி விட்டார்” என அவர் மீது சிலர் சைபர் தாக்குதலை நிகழ்த்தி வருகின்றனர்.
ஒருசில வலதுசாரி அமைப்புகளின் வலைதளப்பக்கங்களில் இருந்தும் மம்முட்டிக்கு எதிர்ப்பு கிளம்பிவருகிறது. அதிலும் சில அமைப்புகள், மேற்கொண்டு மம்முட்டி நடிக்கும் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றெல்லாம் கேட்டுள்ளன.
மலையாள திரையுலகில் மட்டுமன்றி இந்திய சினிமாவிலேயே தவிர்க்க முடியாத நட்சத்திரமாக விளங்கிவரும் மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டி மீது நிகழும் இந்த சைபர் தாக்குதலுக்கு, பலத்த கண்டனங்களும் எழுந்துள்ளன. இந்நிலையில், கேரள அரசியல் தலைவர்கள் பலரும் தங்களின் ஆதரவை மம்முட்டிக்கு தெரிவித்து வருகின்றனர்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago