2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

சர்ச்சையில் கஜோல்

Freelancer   / 2023 ஜூலை 10 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை கஜோல் தமிழில் ‘மின்சார கனவு‘ திரைப்படத்துக்கு பிறகு நீண்ட இடைவெளியில் நடிகர் தனுஷ் நடித்திருந்த ‘வேலைக்காரன்‘ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து சட்டம் தொடர்பான புதிய வெப் சீரிஸ் ‘தி ட்ரையல்’ தொடரில் நடித்து முடித்துள்ளார். இந்தத் தொடர் ஹாஸ்டாரில் வரும் 14 ஆம் திகதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், அண்மையில் நடிகை கஜோல் பேசிய நேர்காணல் ஒன்றில் ‘படிப்பறிவு இல்லாத அரசியல் தலைவர்கள் இந்தியாவில் உள்ளனர். அவர்கள்தான் நம்மை ஆண்டு வருகின்றனர். அவர்களில் பலருக்கும் கண்ணோட்டம் என்பதே இல்லை. அது கல்வி மூலம்தான் கிடைக்கும். கல்வி குறைந்தபட்சம் மாறுபட்ட கண்ணோட்டத்துக்கான வாய்ப்பையாவது கொடுக்கும்‘ என்று கூறியிருந்தார்.

நடிகை கஜோலின் இந்தக் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் சில ரசிகர்கள் ஆதரவு அளித்திருந்தாலும் அரசியல் மட்டத்தில் பல்வேறு சர்ச்சையை இது சந்தித்து வந்தது. இந்த நிலையில் நடிகை கஜோல் தனது கருத்து விளக்கம் அளித்திருக்கிறார்.

அதில், ‘யாரையும் இழிவுபடுத்தும் நோக்கத்தில் இதனைத் தெரிவிக்கவில்லை. கல்வி மற்றும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றித்தான் கருத்து தெரிவித்தேன். எனக்கு எந்த அரசியல் தலைவரையும் இழிவுப்படுத்தும் நோக்கம் கிடையாது. நாட்டை சரியான பாதையில் வழிநடத்தும் சில சிறந்த தலைவர்கள் நம்மிடம் உள்ளனர்‘ என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X