2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

’சூர்யா 44’க்காக ரஜினி பட டைட்டிலை கைப்பற்றிய கார்த்திக் சுப்புராஜ்

Editorial   / 2024 டிசெம்பர் 24 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

'கங்குவா' படத்துக்கு பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவின் 44-வது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.   

இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார், ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார், சபிக் முகமது அலி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை சூர்யாவின் '2D எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனமும், கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ்' நிறுவனமும் சேர்ந்து தயாரித்து வருகிறது.

இதன் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் டாப் கியரில் நடந்து வருகிறது. சமீபத்தில், சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட  இப்படத்தின் ப்ரோமோ அவரது அன்பான ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இதன் டைட்டில் டீசரை நாளை (டிசம்பர் 25-ஆம் திகதி) கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, இந்த படத்துக்கு 'ஜானி' என டைட்டில் வைத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே, 'ஜானி' என்ற டைட்டிலில் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடித்த படம் 1980-ஆம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X