Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
J.A. George / 2023 பெப்ரவரி 07 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடித்து வரும் திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருபவர் பிரபல பொலிவுட் நடிகை கியாரா அத்வானி.
இவர் பிரபல நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த 6ஆம் திகதி திருமணம் செய்ய இருதரப்பு பெற்றோர்கள் முடிவு செய்தனர்.
இதனை அடுத்து திருமணம் நடைபெற இருக்கும் ராஜஸ்தானில் உள்ள அரண்மனைக்கு பொலிவுட் நட்சத்திரங்கள் குவிந்து வருகின்றனர். பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி கூட இந்த திருமணத்திற்கு வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திடீரென திருமணம் இன்றைய தினத்துக்கு (07) மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் மெகந்தி நிகழ்ச்சியும் நேற்று சங்கீத நிகழ்ச்சியும் நடைபெற்று. இன்று திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .