Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
J.A. George / 2022 ஜூன் 14 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
நந்தா, பிதாமகன் திரைப்படங்களை தொடர்ந்து மீண்டும் பாலா இயக்கத்தில் 18 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கிறார் சூர்யா.
சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கிர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மீனவர்களின் பிரச்சினையை மையமாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தில் சூர்யா மாற்றுத்திறனாளியாக நடித்து வருகிறார்.
முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்ற நிலையில், அடுத்தபடியாக கோவாவில் ஒரு மாதம் நடைபெறுகிறது. இந்த நிலையில் விரைவில் சூர்யா தனது மனைவி குழந்தைகளுடன் அமெரிக்காவுக்கு ஒரு வாரம் சுற்றுப்பயணம் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
அவர் சென்னை திரும்பியதும் சூர்யா 41ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் தொடங்குகிறது. இந்தத் திரைப்படத்தை முடித்ததும் வெற்றிமாறனின் வாடிவாசல், ஞானவேலின் புதிய திரைப்படம் என இரண்டு திரைப்படங்களில் அடுத்தடுத்து நடிக்கிறார் சூர்யா.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago