Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2024 நவம்பர் 08 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா பயிற்சியாளர் லோவல் தவானுக்கும் (Lovel Dhawan) ரிஷிகேஷ், சிவ்புரி கங்கைக்கரையில் வெள்ளிக்கிழமை (08) திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.
கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘டம்மி டப்பாசு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அடுத்து ‘ஜோக்கர்’ படத்தில் ரசிகர்களின் பரவலான கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து, ‘ஆண் தேவதை’, ‘ராமே ஆண்டாலும், ராவண ஆண்டாலும்’, ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், ‘குக் வித் கோமாளி’, ‘பிக்பாஸ்’ உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு கவனம் பெற்றார்.
கடந்த ஆண்டு ரம்யா பாண்டியன் பெங்களூருவில் செயல்பட்டு வரும் யோகா மையத்தில் சேர்ந்தார். அங்கு பணியாற்றி வந்த யோகா மாஸ்டர் லோவல் தவான் என்பவருடன் ரம்யா பாண்டியனுக்கு நட்பு ஏற்பட்டு பின்பு, அது காதலாக மாறியது. இருவரின் குடும்பத்தார் ஒப்புதலுடன் திருமணம் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை உத்தராகண்டில் உள்ள ரிஷிகேஷ், சிவ்புரி கங்கை ந்திக்கரையில் நடிகை ரம்யா பாண்டியன் - லோவல் தம்பதிகளின் திருமணம் நடைபெற்றது. இதில் குடும்பத்தினர், உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
47 minute ago
1 hours ago
4 hours ago