2025 பெப்ரவரி 24, திங்கட்கிழமை

கார் விபத்தில் மீண்டும் சிக்கிய அஜித்

Freelancer   / 2025 பெப்ரவரி 24 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் அஜித்குமார், கார் ரேஸில் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த மாதம் டுபாயில் நடந்த கார் ரேஸில் அவருடைய அணி பங்கேற்றது. அதற்கு முன்பாக நடந்த பயிற்சியில் அஜித்குமார் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. இதையடுத்து போட்டியில் இருந்து அவர் விலகினார். அவருடைய அணி பங்கேற்று 3-ம் இடத்தைப் பிடித்தது.

தற்போது ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் கார் ரேஸில் அவர் பங்கேற்றுள்ளார். அங்குள்ள வெலன்சியா நகரில் நேற்று முன் தினம் நடந்த கார் ரேஸில் அஜித்குமார் தனக்கு முன்னால் சென்ற மற்றொரு காரை முந்துவதற்கு முயன்றபோது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி தப்பினார்

இந்நிலையில் அஜித்குமாரின் கார் விபத்துக்குள்ளாகும் போது அவரது காரில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகளை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "அஜித்தின் விடாமுயற்சி வலிமை மிக்கது. எந்த வித காயமும் இன்றி வெளியே வந்தார். ரேஸில் அவர் மீண்டும் பங்கேற்பார்" என்று தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X