Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Ilango Bharathy / 2021 ஜூன் 24 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இதையடுத்து தமிழில் ‘டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன்‘ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.
தற்போது இவர் கைவசம் பார்ட்டி, பொன் மாணிக்கவேல் போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கில் முன்னணி நடிகர்களில் படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நிவேதா பெத்துராஜ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அண்மையில் வெளியிட்டுள்ள பதிவொன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பதிவில் , செயலியொன்றின் மூலம் பிரபல உணவகம் ஒன்றில் சாப்பாடு ஓர்டர் செய்ததாகவும், அங்கிருந்து கிடைக்கப்பெற்ற உணவில், கரப்பான்பூச்சி இருந்ததாகவும் புகார் தெரிவித்துள்ள நிவேதா பெத்துராஜ், இதற்கு ஆதாரமாக புகைப்படமொன்றையும் வெளியிட்டுள்ளார்.
மேலும், கரப்பான் பூச்சியுடன் உணவு டெலிவரி செய்யப்படுவது இது முதல்முறையல்ல என்றும் குறிப்பிட்ட உணவகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடிகை நிவேதா பெத்துராஜ் வலியுறுத்தியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
54 minute ago
1 hours ago