2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கதறியழுத சாய் பல்லவியை மேடையில் கட்டிப்பிடித்த ஹீரோ

J.A. George   / 2021 டிசெம்பர் 20 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நானி, சாய் பல்லவி, க்ரித்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடித்திருக்கும் ஷ்யாம் சிங்கா ராய் படத்தின் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடந்தது.

அந்த விழா மேடையில் பேசிய இயக்குநர் ராகுல், சாய் பல்லவியின் நடிப்புத் திறமையை பாராட்டினார். அதை கேட்டு அரங்கில் இருந்த ரசிகர்கள் எல்லாம் சாய் பல்லவி, சாய் பல்லவி என்று கோரஸாக கூற அவர் எமோஷனலாகிவிட்டார்.

சாய் பல்லவி அழுததை பார்த்த நானி அவரை கட்டிப்பிடித்தார். அரங்கில் இருந்த அனைவரும் சாய் பல்லவியை பாராட்ட, அதை பார்த்து அங்கிருந்த மடோனா செபாஸ்டியன் மற்றும் க்ரித்தி ஷெட்டி சந்தோஷப்பட்டார்கள்.

தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் நானி, சாய் பல்லவி ஆகியோர் சேர்ந்து நடித்திருப்பாதாலேயே ஷ்யாம் சிங்கா ராய் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .