2025 மார்ச் 16, ஞாயிற்றுக்கிழமை

ஏ.ஆர்.ரகுமான் மருத்துவனையில் அனுமதி

S.Renuka   / 2025 மார்ச் 16 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை (16) காலை அனுமதிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இதயத்தில் வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு ரகுமான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக இந்தியா டுடே உள்ளிட்ட ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ‘இசிஜி’, ‘எக்கோகார்டியோகிராம்’ (echocardiogram) உள்ளிட்ட சோதனைகளை மருத்துவர்கள் அவரிடம் மேற்கொண்டுள்ளனர்.

ஏ.ஆர். ரகுமான் ‘ஏஞ்சியோகிராம்’ (angiogram) சிசிச்சையையும் மேற்கொள்ளக்கூடும் என்று அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X