Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 16, புதன்கிழமை
Mayu / 2024 பெப்ரவரி 13 , மு.ப. 11:49 - 0 - 160
சினிமாவில் பிரபலமான பிறகு, அந்த பெயரையும் புகழையும் பயன்படுத்தி அரசியலுக்குள் பிரபலங்கள் நுழைவது புதிது கிடையாது. எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார் என இப்படி ஏராளமான பிரபலங்கள் அரசியலிலும் சாதித்துள்ளனர்.
அந்த வரிசையில் நடிகர் விஜயும் கடந்த 2ம் திகதி, ‘தமிழக வெற்றி கழகம்’ எனத் தனது கட்சியை அறிவித்து அரசியல் பாதையில் நடை போடுகிறார். விரைவில் முழுநேர அரசியலுக்கும் வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து நடிகர் விஷாலும் இயற்கை முடிவு செய்தால் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என அவருடைய அரசியல் ஆசையை கோடிட்டு காட்டியிருக்கிறார். இந்நிலையில், நடிகை வாணி போஜனும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
நகைக் கடை திறப்பு விழா ஒன்றில் நடிகை வாணி போஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரிடம் அரசியல் ஆசை இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பிய போது, "ஒரு பிரபல அரசியல் தலைவரின் வாழ்க்கையை நாங்கள் வெப் சீரிஸாக எடுத்தோம். அதில் நான் நடித்த போது எனக்கு அரசியல் ஆசை இருந்தது. இப்பொழுதும் இருக்கிறது. ஆனால், விரைவில் அரசியலுக்கு வருவேனா என்பது குறித்து தெரியவில்லை" என்றார்.
அவரிடம் விஜய், விஷால் அரசியலுக்குள் வருவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டதற்கு, "அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். என்னைக் கேட்டால் நடிகர் விஜய்க்கு அரசியலில் மக்கள் ஒருமுறை வாய்ப்பு கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர் மக்களுக்காக என்ன செய்கிறார், அவருடைய நோக்கம் என்ன என்பது பற்றி நமக்கும் தெரியவரும்" என்றார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகை வாணி போஜன் தன்னுடைய அரசியல் ஆசையை வெளிப்படுத்தியிருப்பது ரசிகர்கள் மத்தியில் புருவம் உயர்த்த வைத்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
18 minute ago
1 hours ago
2 hours ago