2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

இயக்குனர் ஷங்கரின் வீட்டில் டும்... டும்... டும்...

Ilango Bharathy   / 2021 ஜூன் 25 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழில் ‘ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், முதல்வன், இந்தியன், அந்நியன், சிவாஜி, எந்திரன், ஐ, நண்பன்’ என வரிசையாகப் பல வெற்றிப் படங்களை கொடுத்து இந்தியத் திரையுலகையே தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் ஷங்கர்.

 இந்நிலையில் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின்  திருமணம் இம் மாதம் 27ஆம் திகதி பொள்ளாச்சியில் நடைபெறவுள்ளதாக அண்மையில்  தகவல்கள் வெளிவந்தன.

அந்தவகையில்  தற்போது ஷங்கரின் மகளைத்  திருமணம் செய்யவுள்ளவர்  மதுரை பாந்தர்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளரான தொழிலதிபர் தாமோதரனின் மகன் ரோஹித் என்று கூறப்படுகின்றது.

மேலும் ரோஹித் ஒரு கிரிக்கெட் வீரர் என்றும், அவர்  புதுச்சேரி கிரிக்கெட் அணியின் தலைவராக இருக்கிறார் என்றும் கூறப்படுகின்றது.

அத்துடன் ரோஹித்தின் புகைப்படமானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

எனவே வெகு விரைவில் இயக்குனர் சங்கரின் வீட்டில் டும்…டும்…டும்… சத்தம் கேக்கும் என ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .