2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

இத்தனை வருடங்களாக நடிக்காதது ஏன்? – மோகன் பதில்

Freelancer   / 2024 மே 12 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பழைய நடிகர் மைக் மோகன், தான் இத்தனை ஆண்டுகளாக நடிக்காதது ஏன் என்பது குறித்த விவரத்தை தற்போது தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் தயாரித்துள்ள  'ஹரா' திரைப்படத்தை ஜூன் 7ஆம் திகதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

தமிழ் திரையுலகில் அதிக எண்ணிக்கையில் வெள்ளிவிழா படங்கள் தந்த நடிகர் மோகனின் பிறந்த நாளில், அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஹரா' படத்தின் இசை வெளியீட்டு விழா இரசிகர்கள் மத்தியில் படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள கோலாகலமாகக் நடைபெற்றது. ரஷாந்த் அர்வின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த விழாவில் பேசிய மோகன், “எத்தனை தடவை இரசிகர்களுக்கு நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. உங்களுக்கு நான் காலமெல்லாம் கடன் பட்டிருக்கிறேன். நான் நடித்தாலும், இல்லையென்றாலும் என் மீது அன்பு செலுத்தும் என் இரசிகர்களுக்கு நன்றி.

ஏன் நடிக்கவில்லை எனப் பலரும் கேட்கிறார்கள். என்னைத் தெரிந்தவர்களுக்குத் தெரியும், எனக்குக் கதை பிடித்தால் மட்டுமே நான் நடிப்பேன். விஜய் ஸ்ரீ அவர்கள், 7 முறை கதையைத் திருத்திய பிறகு தான் இந்தப்படம் ஒத்துக்கொண்டேன். இந்தப்படத்திற்குக் கோவை மக்கள் கொடுத்த ஒத்துழைப்பு வியப்புக்குரியது, அத்தனை மக்களுக்கும் எங்கள் நன்றி” என்று தெரிவித்தார்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .