Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 25, புதன்கிழமை
Editorial / 2024 டிசெம்பர் 24 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் சிக்கடப்பள்ளி பொலிஸார் அனுப்பிய புதிய சம்மனை அடுத்து நடிகர் அல்லு அர்ஜுன் இன்று (டிச.24) மீண்டும் காவல் நிலையத்தில் ஆஜர் ஆகிறார். இது அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மத்தியில் கடும் ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் இது அரசியல் பழிவாங்கல் என ஆளும் காங்கிரஸ் அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
நடந்தது என்ன? அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘புஷ்பா 2’. சுகுமார் இயக்கியுள்ள இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 5-ம் திகதி வெளியானது. வசூல் ரீதியாக இந்தப் படம் சாதனை படைத்துள்ளது.
இந்தப் படத்துக்கு தெலங்கானா அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்திருந்தது. அதன்படி கடந்த 4-ம் திகதி இரவு ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடந்த சிறப்புக் காட்சியைப் பார்க்கச் சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்ததால்தான் நெரிசல் ஏற்பட்டது என்பதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
நிதியுதவி அறிவித்தும்.. உயிரிழந்த ரேவதி குடும்பத்துக்கு நிதியுதவி வழங்குவதாக அல்லு அர்ஜுன் அறிவித்தார். இதனிடையே கடந்த 13-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஜாமீன் பெற்று சிறையில் இருந்து அவர் வெளிவந்தார். பின்னர் அவரது வீடு மீது சிலர் தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவங்களின் பின்னணியில் முதல்வர் ரேவந்த் ரெட்டியின் அழுத்தம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனுக்கு பொலிஸ் மீண்டும் சம்மன் அனுப்பியது. இதனையடுத்து சிக்கடப்பள்ளி காவல்நிலையத்தில் அவர் ஆஜரானார். முன்னதாக அவர் தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அரசியல் பழிவாங்கலா? முன்னதாக நேற்று (23), அல்லு அர்ஜுன் வீடு தாக்குதல் சம்பவத்தில் கைதாகி ஜாமீன் பெற்றவர்களுள் ஒருவரான ஸ்ரீநிவாச ரெட்டி முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகளும், அல்லு அர்ஜுனின் ரசிகர்களும் அரசியல் பழிவாங்கலால் அல்லு அர்ஜுன் நெருக்கப்படுவதாக குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago