2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

அனிருத்தை திருமணம் செய்ய சம்மதம்

Freelancer   / 2022 ஜூன் 07 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடகி ஜொனிதா காந்தி இசையமைப்பாளர் அனிருத்தை திருமணம் செய்ய சம்மதம் என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் உள்பட பல நடிகர்களின் படங்களுக்கு தற்போது ஒரே நேரத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

அதுமட்டுமின்றி தெலுங்கு படங்களிலும், இந்தி படங்களில் கூட அவர் இசையமைத்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான 'விக்ரம்' திரைப்படத்தில் அனிருத்தின் பின்னணி இசை மிக பிரமாதமாக இருந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில், அனிருத்தை திருமணம் செய்ய தனக்கு சம்மதமென பாடகி ஜொனிதா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி டேட்டிங்கில் இருப்பதாகவும், காதலித்து வருவதாகவும், திருமணம் செய்யப்போவதாகவும் வதந்திகள் வெளியான நிலையில், தற்போது ஜொனிதா காந்தி அவரைத் திருமணம் செய்துகொள்ள சம்மதம் என கூறியுள்ளார்.

சமீபத்தில் ஜொனிதா காந்தி கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் திருமணம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதில் 'ரன்வீர்சிங், சூர்யா, அனிருத் ஆகிய மூவரில் யாரை திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கேட்டபோது 'சூர்யா, ரன்வீர்சிங் ஆகியோர்களுக்கு திருமணம் ஆகிவிட்டதால் அனிருத்தை திருமணம் செய்ய சம்மதம் என்று ஜொனிதா தெரிவித்தார்.

இந்த நிலையில் ஜொனிதா காந்தியின் இந்த பதிலை அடுத்து அனிருத் - ஜொனிதா காந்தி ஜோடி பொருத்தமாக இருக்கும் என்றும், இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் பொருத்தமான ஜோடியாக இருப்பார்கள் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுவரை அனிருத் கம்போஸ் செய்த ஐந்து பாடல்களை ஜொனிதா காந்தி பாடி உள்ளார் என்பதும் , குறிப்பாக அனிருத்துடன் அவர் பாடிய 'அரபிக்குத்து' பாடல் சூப்பர் ஹிட்
ஆனமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .