2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

அடம்பிடிக்கும் கீர்த்தி சுரேஷ்

J.A. George   / 2022 ஜூன் 07 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்திய முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். மகாநடி திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்றவருக்கு அதன்பிறகு தமிழ், தெலுங்கில் சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த திரைப்படங்கள் ஹிட்டாக அமையவில்லை.

இதனால் வித்தியாசமான கதை தேடலில் ஈடுபட்டு இருப்பதாக கூறும் கீர்த்தி சுரேஷ், தான் அளித்த ஒரு பேட்டியில், “தேசிய விருது பெற்று விட்டபோதும் என்னுடைய நடிப்பு இன்னமும் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. நான் நடித்த திரைப்படங்களை பார்க்கும்போது அதில் நிறைய குறைகள் இருப்பதாக அறிகிறேன்.

அதன் காரணமாகவே பெரும்பாலும் நான் நடித்த திரைப்படங்களை நான் பார்ப்பதில்லை. காரணம் நான் செய்த தவறுகள் மீண்டும் மீண்டும் என் கண்முன்னே வந்து செல்லும். இதை விட இன்னும் சிறப்பாக நடித்திருக்கலாமே என்று மனதுக்குள் அசை போட்டுக் கொண்டே இருப்பேன்” என்று கூறியுள்ளார்.

அத்துடன், நடிப்பின் மீது எனக்கு தீராத காதல் உள்ளது. அதனால் இன்னும் நிறைய மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியுள்ளது என்று கூறி இருக்கிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .