2024 செப்டெம்பர் 21, சனிக்கிழமை

நாகவிகாரையில் புத்தர் சிலை நிறுவுவதற்கு எதிர்ப்பதாக புகார்

Editorial   / 2017 ஜூலை 05 , பி.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், நயினாதீவு நாகவிகாரையில் புத்தர் சிலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதுடன், முல்லைதீவு விகாரையிலிருந்து விகாராதிபதியை வெளியேறுமாறு அச்சுறுத்தப்படுவதாக ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பியான ஜயந்த சமரவீர தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற, தேருநர்களைப் பதிவு செய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு அவர் தொடர்ந்து ​உரையாற்றுகையில்,  

‘தெற்கில் தமிழ், சிங்கள், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர். இந்த நாட்டில் எவருக்கும் எங்கு வாழும் உரிமையும் இருக்கின்றது. ஆனால், வடக்கில் நிலைமை வேறாக இருக்கின்றது.  

நாகவிகாரையில் புத்தர்சிலை அமைப்பதற்கு எதிர்ப்பு வெளியிடப்படுகின்றது. முல்லைதீவில் விகாரை அமைப்பதற்கு போர்க்கொடி தூக்கப்பட்டு, விகாராதிபதியை வெளியேறுமாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அங்கு இப்படியொரு நிலை இருக்கும்போது இங்கு எப்படி வேறு கோணத்தில் சிந்திப்பது. இந்நிலை மாறவேண்டும்’ என்றார். 

இதன்போது எழுந்த, சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், இந்தக்குற்றச்சாட்டை நிராகரித்ததுடன் வடக்கிலுள்ள கோவில்கள்தான் உடைக்கப்படுகின்றன என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .