Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2017 நவம்பர் 19 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனுஷி சில்லார், 2017ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை சுவீகரித்துக்கொண்டுள்ளார்.
ஏறத்தாழ 17 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியப் பெண் ஒருவர், இந்தப் பட்டத்தை பெற்றுள்ளார்.
108 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்ற உலக அழகி போட்டி, சீனாவின் தெற்கு சான்யா நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நடுவர்களின் கேள்விகளுக்கு மிகச் சிறப்பாக பதிலளித்து பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்த இவர், நடுவர் குழாமல் 2017ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வைத்தியத்துறையில் பயின்றும்வரும் மனுஷி சில்லார், பள்ளியில் இருந்தே மிகவும் திறமையான நபராக திகழ்ந்து வந்துள்ளார்.
கவிஞை, ஓவியர், பாடகி, நடனத்தாரகை (குச்சிபுடி), விளையாட்டு வீராங்கனை என பல்துறைசார் கலைஞரான இவர், சமூக சேவகி என்பதும் குறிப்பிடத்தக்கது.
மனுஷி சில்லார், மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இந்தியாவில் 20 கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக 'புராஜக்ட் சக்தி' என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறார்.
பல பெண்களிடம், மாதவிடாய் குறித்த கலந்துரையாடலிலும் ஈடுபட்டு இருக்கிறார். இந்தியா முழுவதும் 5 ஆயிரம் பெண்களுக்கு இவர் இலவசமாக சிகிச்சை அளித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .