Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 ஜூன் 28 , மு.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
கும்புறுபிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரலியதுர பிரதேசத்தில், வீடொன்றுக்கு முன்பாக உள்ள இரண்டு மரங்களுக்கு இடையில், போடப்பட்டிருந்த மூங்கிலில் தொங்கிகொண்டிருந்த நான்கு சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தந்தை, அவரின் இரண்டு மகள்மார் மற்றும் மகன் ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கும்புறுபிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரலியதுர பிரதேசத்தில், வீடொன்று தீப்பற்றி எரிந்துகொண்டிருப்பதாக, பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கமான 119க்கு திங்கட்கிழமை இரவு 9:45க்கு அழைப்பு கிடைத்துள்ளது.
பொலிஸார் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்ற வேளையில், அந்த வீடு, தீயினால் முற்றாக எரிந்து நாசமாகிவிட்டது. எனினும், அந்த வீட்டுக்கு முன்பாக இருந்த இரண்டு பலாமரங்களுக்கு இடையில் போடப்பட்டிருந்த மூங்கிலில் நான்கு சடலங்கள் தொங்கிகொண்டிருந்துள்ளன.
தந்தையான பத்திரணகே பியந்த (வயது 44), பத்திரணகே கௌஷல்யா செவ்வந்தி (வயது 16), பத்திரணகே ஹிருகா செவ்வந்திகா (வயது 10), அவருடைய மகனான ரத்சேகொட மங்கள தேரர் (வயது 14) ஆகியோரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் இடம்பெற்ற வேளையில், தேரரும் வீட்டுக்கு வந்திருந்துள்ளார் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிள்ளைகளின் தந்தைக்கும், தாய்க்கும் இடையில் ஏற்பட்டிருந்த குடும்பப் பிரச்சினையை அடிப்படையாக வைத்தே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், தன்னுடைய பிள்ளைகளை விட்டுவிட்டு, ஒரு மாதத்துக்கு முன்னரே வீட்டிலிருந்து தந்தை வெளியேறிவிட்டதாகவும் அறியமுடிகிறது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago