2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

பாடசாலை மாணவர்கள் இடைவிலகுதலை முற்றாக நீக்கும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்டுவரும் 'சாதிக்கும் சந்ததி' செயற்திட்டத்தின் 15ஆம் கட்ட நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட 30 மாணவர்களுக்கு ரூபாய் 4 இலட்சம் பெறுமதியான துவிச்சக்கரவண்டிகள், முல்லைத்தீவு, கள்ளப்பாடு பொதுநோக்கு மண்டபத்தில் கடந்த 22ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன. 

வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனினால் இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

கடந்த ஆண்டு மே 17 இல் முள்ளிவாய்க்காலில் புலம்பெயர் உறவுகளின் பங்களிப்போடு தொடங்கிய இச்செயற்திட்டம் இன்று அதன் 14 கட்டங்களில் 920 மாணவர்களை உள்ளீர்த்துள்ளது. 

இதன் அடுத்த பகுதியாக வறுமையொடு தொலைதூரத்தில் இருந்து பாடசாலைக்கு நடந்து வருகின்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் வட மாகாணசபை உறுப்பினர் ரவிகரனின் 2015ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து ரூபாய் 430,000 ஒதுக்கப்பட்டிருந்தது. 

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 30 மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

வள்ளிபுனம் கனிஸ்ட உயர்தர வித்தியாலயம், கலைமகள் வித்தியாலயம், முல்லைத்தீவு மகா வித்தியாலயம், வித்தியானந்தா கல்லூரி,  விசுவமடு மகா வித்தியாலயம், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி, விசுவநாதர் ஆரம்ப பாடசாலை, அம்பலவன் பொக்கணை மகா வித்தியாலயம், செம்மலை மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கி வைக்கப்பட்ட இந்நிகழ்வில் முல்லைத்தீவு விளையாட்டுத்துறை வீரரும் பயிற்றுவிப்பாளருமாகிய வள்ளுவன், ஆசிரியர், பெற்றோர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .