2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

18 கிலோ 400 கிராம் கேரள கஞ்சா மீட்பு- மூவர் கைது

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 17 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாண சிறப்பு சோதனைப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அடம்பன் பொலிஸ் பிரிவில் மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள வெட்டய முறிப்பு பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, 18 கிலோ 200 கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். 

மன்னார் பொலிஸ் பிரிவின் மன்னார் நகரில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 200 கிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அடம்பன் மற்றும் மன்னார் பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டார்.

பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் பொலிஸாரால் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக, வியாழக்கிழமை (17) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போதே இவை கைப்பற்றப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X