2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

விடுமுறைக்காக வந்தவர் விபத்தில் மரணம்

Janu   / 2024 செப்டெம்பர் 10 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மன் நாட்டில் இருந்து தனது சொந்த ஊரான உடுப்பிட்டிக்கு, விடுமுறைக்காக வந்திருந்த ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் திங்கட்கிழமை (08) இடம்பெற்றுள்ளது .

யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த செல்வராசா சிவஞானம் (வயது 74)  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

நீண்ட காலமாக ஜேர்மன் நாட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விடுமுறையை கழிக்க தனது சொந்த ஊருக்கு திரும்பி இருந்தார். 

கடந்த சனிக்கிழமை (07) அன்று தனது மனைவியுடன் உறவினர் வீட்டுக்கு சென்ற வேளை விபத்தில் சிக்கி இருவரும் படுகாயமடைந்துள்ளனர். 

இருவரையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி தொடர்ந்து யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

எம் . றொசாந்த் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .