2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

வடக்கில் தந்தை செல்வா விருது

R.Tharaniya   / 2025 மார்ச் 30 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தந்தை செல்வாவின் பிறந்த நாளை முன்னிட்டு தந்தை செல்வா நற்பணி மன்றத்தினால் பல்துறை ஆளுமைகளுக்கு தந்தை செல்வா விருது ஞாயிற்றுக்கிழமை (30)மாலை வழங்கி வைக்கப்பட்டது.

யாழ். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் தலைவர் விசாகப்பெருமாள் உமாபதி தலைமையில் குறித்த நிகழ்வு ஆரம்பமானது. மேலும் வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பல்துறை சார்ந்த ஆளுமைகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தொடர்ந்து தந்தை செல்வா, நற்பணி மன்றத்தினால் பொருண்மியம் நலிந்தோருக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டது. இதன் போது தந்தை செல்வா நற்பணி மன்றத்தின், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

பு.கஜிந்தன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X