Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Janu / 2024 டிசெம்பர் 08 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 300 பவுன் நகைகளை திருடிய சம்பவம் தொடர்பாக நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது பெருமளவு நகைகள், ஆவணங்கள், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், கைக்குண்டு என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் பகுதி பொலிஸ் பிரிவுகளில் கடந்த இரண்டு வருடங்களாக துவிச்சக்கர வண்டியில் முகத்தை மறைத்து சென்று நூதனமாக நகைகளை திருடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றது.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த புங்குடுதீவைச் சேர்ந்த பிரதான சந்தேக நபர் கொழும்பில் தலைமறைவாக இருந்த நிலையில் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் சந்தேக நபரின் மனைவி அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 90 பவுன் நகைகள் மீட்கப்பட்டதுடன், திருடிய நகைகளை விற்ற பணத்தில் சந்தேக நபர் கொழும்பில் சொகுசு வீடொன்றை அமைத்தமையும் பொலிஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட நகைகளை வாங்கிய கொழும்பைச் சேர்ந்த மூன்று பேரும் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிதர்ஷன் வினோத்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
55 minute ago
1 hours ago