2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

யாழ்ப்பாணத்தில் பெல் 212 கண்காணிப்பில் ஈடுபட்டது

Editorial   / 2024 நவம்பர் 28 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்காணிப்பதற்காக விமானப்படை மேலதிக கண்காணிப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளதுடன்  இலங்கை விமானப்படை யாழ்ப்பாணம் முகாமில் நிலைகொண்டுள்ள விமானப்படை இலக்கம் 7 ​​படைப்பிரிவுக்கு சொந்தமான பெல் 212 உலங்குவானூர்தி யாழ்ப்பாணம் பிரதேசத்தை கண்காணிக்க வியாழக்கிழமை (28) பயன்படுத்தப்பட்டது.

 யாழ்ப்பாணப் பகுதியில் கண்காணிப்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டதுடன், நெடுந்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் குழுவொன்று அந்த விமானத்தின் மூலம் யாழ்ப்பாணம் விமானப்படை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .