2025 ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை

மதுபானம் விற்பனை செய்த பெண் கைது

Janu   / 2025 பெப்ரவரி 10 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீண்ட காலமாக சட்டத்துக்கு புறம்பாக மதுபானம்  விற்பனை செய்த பெண் ஒருவர் திங்கட்கிழமை (10) அன்று , 27 கால் மதுபான போத்தல்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியை சேர்ந்த சந்தேக நபரான  பெண்  கால் போத்தலை 1000 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்ததாக  தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பு.கஜிந்தன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X