2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பற்றைக்குள்ளிருந்து கார் மீட்பு

Editorial   / 2024 ஒக்டோபர் 22 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து சொகுசு கார் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பற்றைக்காடு ஒன்றினுள் சொகுசு கார் ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் காரை மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.காரின் இலக்க தகட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , அது போலியானது என தெரிய வந்துள்ளது. அத்துடன் மீட்க்கப்பட்ட காரில் இருந்த ஆவணங்களும் போலியானவை என்பது தெரிய வந்துள்ளது.குற்றச்செயல்களுடன் தொடர்புடைய காராக இருக்லாம் என சந்தேகம் வெளியிட்ட பொலிஸார் கார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .