2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

நேர கணிப்பாளர் மீது தாக்குதல்

Janu   / 2024 டிசெம்பர் 03 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச,தனியார் பேருந்து தரப்பினருக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டமையால் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (03) காலை அமைதியின்மை ஏற்பட்டது.

வவுனியாவில் இருந்து கல்முனை நோக்கி புறப்படத் தயாராக இருந்த அரச மற்றும் தனியார் பேருந்து தரப்பினருக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்ப்பட்டுள்ளது. அரச பேருந்து புறப்படுகின்ற நேரம் தொடர்பிலேயே குறித்த வாய்த்தர்க்கம் ஏற்ப்பட்டுள்ளது. 

இதனால் பேருந்து நிலையப்பகுதியில் இரு தரப்பிற்கும் இடையில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் நிலைமையை கட்டுப்படுத்தியிருந்தனர். 

இதற்கிடையில் பேருந்து நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்துச் சபையின் நேர கணிப்பாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறி அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், அரச பேருந்து  ஒன்றும்  தனியார் பேருந்தும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

க. அகரன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .