2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

தேங்காய் உற்பத்தி பாரிய வீழ்ச்சி

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 06 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் தேங்காய் உற்பத்தி 32.3 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. எதிர்வரும் மாதங்களில் மேலும் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தேங்காய் உற்பத்தியில் பெரும் சரிவை ஏற்படுத்தி வரும் பிரதான காரணிகளில் தென்னை மரங்களில் பரவி வருகின்ற வெள்ளை ஈக்களின் தாக்கமும் ஒன்றாக உள்ளது. ஆனால், வெள்ளை ஈக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த இதுவரையில் அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை எடுக்காமல் அசமந்தமாக உள்ளது என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்னை மரங்களில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வெள்ளை ஈக்களின் தாக்கம் தேங்காய் உற்பத்தியைப் பாதித்து வருவது தொடர்பாக  பொ. ஐங்கரநேசன் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார்.

அந்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் தமிழ் - சிங்கள மக்களின் உணவிலும் பண்பாட்டிலும் பிரதான இடத்தைப் பிடித்திருக்கின்ற தேங்காய்கள் ஏற்றுமதியின் மூலம் நாட்டுக்குக் கணிசமான அந்நிய செலாவணியை ஈட்டித்தருகின்றன.

உற்பத்தியாகும் தேங்காய்கள் மூன்றில் இரண்டு பங்கு உள்ளூரில் நுகரப்பட, மூன்றில் ஒரு பாகம் உலர்ந்த தேங்காய்த் துருவல் களாகவும், தேங்காய் எண்ணெயாகவும் மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 

இவற்றுக்கான ஆண்டுக்கு 4 பில்லியன் தேங்காய்கள் தேவைப்படும் நிலையில் தற்போது 3 பில்லியன் தேங்காய்கள் வரையிலேயே அறுவடை செய்யப்படுவதாகத் தெங்கு அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தென்னையுடன் தொடர்புபட்ட இன்னுமொரு அமைப்பான தென்னை ஆராய்ச்சி நிறுவனம் அடுத்த 2026ஆம் ஆண்டில் சுமார் நூறு மில்லியன் தேங்காய்களுக்குப் பற்றாக்குறைவு ஏற்படும் என்று தெரிவித்திருக்கிறது.

பற்றாக்குறைகளை ஈடுசெய்வதற்காகத் தேங்காய்ப்பால் உலர்ந்த தேங்காய்த் தூள், குளிர்ந்த தேங்காய்க்கூழ் ஆகியவனவற்றை இறக்குமதி செய்ய அ செய்ய அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

இதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது பொருளாதாரரீதியாக பின்தங்கிய வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற ஏழை எளிய மக்கள் தம் வீட்டு வளவுகளில் உள்ள தென்னைமரங்களை உணவாதாரமாகவும் வாழ்வாதாரமாகவும் பயன்படுத்திவந்த மக்கள் இன்று அம்மரங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளை ஈக்களின் தாக்கத்தால் தேங்காயைச் சொட்டாகப் பயன்படுத்தும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

பெருமெடுப்பில் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை முன்னெடுத்து வரும் அரசாங்கம் குப்பை கூழங்களையும் சுவரொட்டிகளையும் அகற்றுவதோடு நிற்காமல் வெள்ளை ஈக்களை அகற்றித் தென்னையைச் சுத்தம் செய்வதையும் வதையும் அத்திட்டத்தில் உள்வாங்க வேண்டும். விரைந்து செயற்படாவிடின் வீட்டினதும் நாட்டினதும் தெங்குப் பொருளாதாரம் மென்மேலும் வீழ்ச்சியடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பு.கஜிந்தன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X