2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கூரிய ஆயுதங்கள் மீட்பு

Janu   / 2024 ஒக்டோபர் 24 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கூரிய ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய வியாழக்கிழமை (24) அன்று  மேற்கொண்ட சுற்றிவழைப்பின் போது வீடொன்றில் இருந்து  ஐந்து வாள்கள் உள்ளிட்ட எழு கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்பட்டவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

வன்முறையில் ஈடுபடுவதற்கு தயாராக குறித்த ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் வீட்டில் வசித்த சந்தேக நபர் தலைமறைவான நிலையில் சம்பவம் தொடர்பாக  விசாரணைகளை மேற்கொண்டுள்ள வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  நிதர்ஷன் வி​னோத்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .