2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சியில் அறிய வாய்ப்பு

Freelancer   / 2023 ஒக்டோபர் 04 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

யது பாஸ்கரன்,   மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவில் எழுதுதல் வாசித்தல் திறன் குறைத்தவர்களுக்கான வாய்மொழிப்பரீட்சையினை வெள்ளிக்கிழமை (06) ஆம் திகதி  நடாத்துவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சாரதி அனுமதிப்பத்திரம் பெறத்தவறியவர்கள் இவ் அரிய சந்தர்ப்பத்தை தவறவிடாது பயன்படுத்திக்கொள்ளுமாறு 

கிளிநொச்சி மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவின் பிரதம மோட்டார் வாகன பரிசோதகர் G.H.D.K விஜயசேகரா அறிவித்துள்ளார்.

மேலும், பரீட்சைக்கு தோற்றுவதற்கு முன் A9 வீதி, கிளிநொச்சி பழைய கச்சேரி வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவின் மாவட்ட காரியாலயத்துடன் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்வதுடன், மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .