2025 ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை

கால்நடை திருடர் குழு​ கைது

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 17 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீவக பகுதியில் திட்டமிட்டு கால்நடை திருட்டில் ஈடுபட்டு வந்த திருடர் குழுவொன்று வேலணையில் மக்களது முயற்சியால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் வேலணை 6 ஆம் வட்டாரம் சங்கத்தார் கேணி பகுதியில் புதன்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரிய வருகையில் -

வேலணை பிரதேச த்தின் பல்வேறு பகுதிகளில் திருட்டுத்தனமாக பிடிக்கப்பட்ட ஆடுகளின் ஒரு பகுதி, வேலணை 6 ஆம் வட்டாரம் சங்கத்தார் கேணி பகுதியிலுள்ள குறித்த திருட்டுக் கும்பலின் சந்தேக நபராக கருதப்படும் ஒருவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த.

இந்நிலையில் குறித்த ஆடுகளை வெகியூரைச் சேர்ந்த சிலரின் ஒத்துழைப்புடன் புதன்கிழமை (16) இரவு மகேந்திரா வாகனம் மூலம் யாழ்ப்பாணத்துக்கு சட்டவிரோதமாக கடத்தி செல்லும் முயற்சியில் குறித்த குழு இறங்கியுள்ளது.

மேலும் குறித்த வாகனத்தில் ஏற்றும் சந்தர்ப்பத்தில் அதை சிலர் கண்டு சந்தேகித்து சம்பவம் தொடர்பில் ஊரிலுள்ள முக்கியஸ்தர்கள் மற்றும் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததுடன் பொதுமக்கள் அந்த திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர்களை பிடித்து. பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும்,  சந்தேக நபர்களின் சான்றுப் பொருட்களும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்ப டுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நிதர்சன் வினோத்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X