2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

காத்திருந்தவர் கைது ; வீட்டார் தப்பியோட்டம்

Janu   / 2024 ஜூன் 10 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு , தனது குடும்பத்தினருடன் வருகை தந்த நபர் ஒருவர் அரியாலை பகுதியில், நாள் வாடகைக்கு வீடொன்றை பெற்று தங்கியுள்ளார்.

இந்நிலையில் சனிக்கிழமை (09) அன்று குறித்த நபர் திருநெல்வேலி சந்தைக்கு அண்மித்த பகுதியில்,  போலி நாணய தாள்களை அச்சிடும் இயந்திரம் மற்றும் நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பயன்படும் தாள்களை நபர் ஒருவருக்கு விற்பனை செய்யும் நோக்கில் காத்திருந்துள்ளார் .

இது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து அவரிடம் இருந்த பொருட்களை மீட்டுள்ளனர் . 

கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த போது , அவர் குடும்பத்துடன் அரியாலையில் தங்கியிருப்பது தெரிய வந்ததையடுத்து , குறித்த வீட்டுக்கு பொலிஸ் குழு சென்றுள்ளனர் . அப்போது வீட்டில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார்  முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .