2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

“எமது சுற்றாடலை நாமே பாதுகாப்போம்”

Freelancer   / 2022 பெப்ரவரி 05 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


கடற்கரை சூழலில் காணப்படும் இயற்கைக்கு தீங்கு விளைவிக்க கூடிய கழிவு பொருட்களை அப்புறப்படுத்தும் முகமாக “எமது சுற்றாடலை நாமே பாதுகாப்போம்” எனும் தொனிப் பொருளில் சிரமதான செயற்திட்டம் மன்னாரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மன்னார் நகர் பிரதேச செயலாளர் ம.பிரதீப் தலைமையில் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் மெசிடோவின் அனுசரனையில் சிரமதான  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம்  (05) காலை 7.30 மணி தொடக்கம் 9 மணி வரை மன்னார் செளத்பார் தொடக்கம் தாழ்வுபாடு கடற்கரை வரை  சுமார் 4 கிலோமீட்டர் வரையிலான கடற்கரை பகுதியில் கழிவு பொருட்களை அப்புறப்படுத்தும் பணி இடம் பெற்றது.

நகர சபை சுத்திகரிப்பு பணியாளர்களின் ஒத்துழைப்புடன் அனைத்து கழிவுகளும் அப்புறப்படுத்தப்பட்டன.

சாந்திபுரம்,கீரி,தாழ்வுபாடு,ஆகிய மூன்று  கிராம சேவையாளர் பிரிவுகளை சேர்ந்த சமுர்த்தி பயனாளிகள்,மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு சிரமதான பணிகளை இந்த மாபெரும் சிரமதான பணியை மேற்கொண்டனர்.

அத்தோடு  இந்த சிரமதான பணியில் மன்னார் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர்,கிராம அலுவலர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,மெசிடோ நிறுவன ஊழியர்களும் இணைந்துகொண்டனர். 

குறித்த செயற்திட்டம் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் மன்னார் பிரதேச செயலக பிரிவில் உள்ள கடற்கரை பகுதிகளில் விரிவுபடுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .