2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

வில்லியம் ஜீ.மோர்கன் அறிமுகப்படுத்திய கரப்பந்தாட்டம்

George   / 2015 ஜனவரி 05 , பி.ப. 09:58 - 5     - {{hitsCtrl.values.hits}}

-ஜோசப் அன்டன் ஜோர்ஜ்

1895 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி அமெரிக்காவின் ஹொலியோக், மாஸ்சூசென் எனுமிடத்தில் வசித்து வந்த உடற்கல்வி பயிற்சியாளரான வில்லியம் ஜீ.மோர்கன் என்பவரால் ஒரு புதிய விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் அதனை பார்த்த சிலர் மிகவும் ஆச்சரியப்பட்டதுடன் அது ஏதோ சாதாரணமான ஒன்று என்று நினைத்திருந்தனர்.

தான் அறிமுகப்படுத்திய விளையாட்டு பின்னாட்களில் உலகளாவிய ரீதியில் சிறந்த வரவேற்பை பெறும் விளையாட்டாக மாறும் என அந்த விளையாட்டை அறிமுகப்படுத்திய மோர்கன் கூட நினைத்து பார்த்திருப்பாரா என்பது சந்தேகமே?

மோர்கன் அன்று(1895ஆம் ஆண்டு )அறிமுகப்படுத்தியது, இன்று உலகளாவிய ரீதியில் மில்லியன் கணக்கானவர்கள் விளையாடும் விளையாட்டாக மாறியுள்ள கரப்பந்தாட்டம் தான்.

கரப்பந்தாட்டம் (வொலிபோல்) என்பது அணிக்கு ஆறு பேர் வீதம், வலைக்கு இருபுறமும் நின்று கைகளால் பந்தைத் தட்டி எதிர்ப்பக்கம் அனுப்பும் விளையாட்டு  என கூறலாம்.

பந்தை எதிரணியினரால் மூன்றே தட்டுதல்களில் திருப்பி அனுப்ப முடியாவிட்டால் அல்லது அவர்கள் பகுதிக்குள் தரையில் விழுந்தால், எதிரணிக்கு ஒரு புள்ளி வழங்கப்படும்.

பெரும்பாலும் உள்ளக அரங்கில் விளக்குகள் ஒளியில் ஆடப்படும் விளையாட்டு இதுவாகும். களத்தின் நடுவில் வலையும், அதன் இரு புறமும் 3 அடியில் ஒரு கோடும் போடப்பட்டிருக்கும். எந்த வீரரும் அந்தக் கோட்டைத் தாண்டி வலையருகில் கால் வைத்தாலோ, உடலின் எந்தப் பகுதியாவது வலையில் பட்டாலோ, அது தப்பாட்டமாக (ஃபவுல்) கருதப்படும். வலையின் மேல்மட்ட உயரம் ஆண்களுக்கு 2.43 மீட்டராகவும், பெண்களுக்கு 2.24 மீட்டராகவும் இருக்கும்.

கரப்பந்தின் ஆட்ட விதிகள் எனும்போது, முழங்கை வரையிலும், விரல்களாலும் பந்தை தட்டி மேலெழும்பச் செய்யலாம். எழும்பிய பந்தை எதிரணி பக்கம் ஓங்கி அடிக்க உள்ளங்கை பயன்படுத்தலாம். ஒருவர் தொடர்ந்து ஒரு முறைக்கு மேல் பந்தை தட்டக் கூடாது. பந்து தங்கள் பக்கம் வந்ததும் மூன்று தட்டுதலுக்கு அதிகமாகாமல் எதிரணி பக்கம் திருப்பியனுப்ப வேண்டும்.

பந்தை முதலில் தட்டுதல் தொடக்க வீச்சு எனப்படும். இது எல்லைக் கோட்டுக்கு வெளியே இருந்து வலையில் மோதாமல் எதிரணியினரின் பகுதிக்கு செலுத்த வேண்டும். எதிரணி பக்கத்தில் இருந்து வரும் பந்தை வலை அருகிலேயே தடுத்தாடல் எனப்படும்.
1895 ஆண்டு கரப்பந்தாட்டம் அறிமுகப்செய்யப்பட்டிருந்தாலும் அது ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஒன்றாக அங்கிகரிக்கப்பட்டது 1964ஆம் ஆண்டுதான்.

இந்த ஒலிப்பிக் போட்டிகளில் கரப்பந்தாட்டம் ஆண், பெண் என இரு பாலருக்குமாக சேர்த்துக் கொள்ளப்பட்டது. பீச் வொலிபோல் எனும் கடற்கரையில் ஆடும் கரப்பந்து ஆட்டத்தில் ஒரு அணிக்கு இருவர் மட்டுமே ஆடுவார்கள். 

1940களில் அமெரிக்காவில் ஆடப்பட்ட இந்த வகை கரப்பந்தாட்டம் தற்போது பல நாடுகளிலும் பரவி, 1996ஆம் ஆண்டு ஒலிம்பிக்கிலும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

1995ஆம் ஆண்டு கரப்பந்தாட்டம் அறிமுகம் செய்யப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்தன. ஜக்கிய அமெரிக்காவில் தோற்றம் பெற்ற கரப்பந்து உலகளாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற விளையாட்டாக பின்னாட்களில் மாறியது.

இன்றைய நாட்களில் 46 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் கரப்பந்து விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். உலகளாவிய ரீதியில், 800 மில்லியன் கரப்பந்தாட்ட வீரர்கள் வாரத்தில் ஒரு முறையாவது விளையாடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது உலகளாவிய ரீதியில் 35 மில்லியன் உரிமம் பெற்ற கரப்பந்தாட்ட வீரர்கள் உள்ளதுடன் உலகிலுள்ள மிக பிரசித்தி பெற்ற விளையாட்டுகளில் ஒன்றாக கரப்பந்து மாறியுள்ளது. சுமார் 260 மில்லியன் மக்கள் உலகம் முழுவதும் கரப்பந்தாட்ட ரசிகர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 5

  • gow Thursday, 10 December 2015 10:58 AM

    thank you this is use for my studies

    Reply : 26       27

    pawan Tuesday, 26 February 2019 03:01 PM

    நன்று

    Reply : 11       6

    ஜெ .ஜெயநிலா Sunday, 05 July 2020 11:26 AM

    சிறந்த விளக்கம் தந்துள்ளீர்கள்

    Reply : 10       4

    Rija Monday, 14 August 2023 05:14 PM

    Super

    Reply : 3       0

    M.Harshika Friday, 18 August 2023 01:40 PM

    Good work

    Reply : 7       1


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .