2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

மின்னொளி மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி

Kogilavani   / 2013 செப்டெம்பர் 07 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்


மட்டக்களப்பு புதிய நண்பர்கள் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் நடைபெறும் மின்னொளி மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு நேற்று இரவு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் ஆரம்ப நிகழ்வில், மட்டக்களப்பு விமானப்படை முகாம் பெறுப்பதிகாரி லெப்ரினன் நிமேஸ் அபேவர்த்தன, மட்டக்களப்பு இராணுவ முகாம் பொறுப்பதிகாரி நிரோசன் வீரக்கொடி ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டு போட்டிகளை ஆரம்பித்து வைத்தனர்.

இவ் ஆரம்ப நிகழ்வில், விசேட நிகழ்வாக தீப்பந்தம் சுழற்றி கழக உறுப்பினர் சாகசம் காண்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அணிக்கு ஏழுபேருடையதாகவும், 5 ஓவர்களைக் கொண்டதாகவும் அமையவுள்ள இவ் மின்னொளி மென்பந்துக்கிரிக்கட் சுற்றுப் போட்டி எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இரவு 7 மணிமுதல் அதிகாலை 2 மணிவரையில், முன்பதிவு அடிப்படையில் 40 அணிகள் இச்சுற்றுப் போட்டியில் மோதவுள்ளன.

நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு ஒரு குழுக்கள் வீதம் நொக்கவுட் முறையில் சுற்றுப்போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றி அணிகள் நான்கு தெரிவு செய்யப்படுவதுடன், இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகன், தொடராட்ட நாயகன், சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த களத்தடுப்பாளர், சுப்பர் 8 போட்டி ஆட்ட நாயகன் ஆகிய பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

தெரிவு செய்யப்படும் நான்கு அணிகளுக்கு முறையே 10ஆயிரம், 7500, 5000, 2500 வீதம் பணப்பரிசில்களும், வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்படவுள்ளன.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .