2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

அவுஸ்திரேலியாவில் இலங்கை அணிக்கு கிடைத்தது காயங்கள் மட்டுமே

A.P.Mathan   / 2013 ஜனவரி 10 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணி, அவுஸ்திரேலியாவில் வைத்து மோசமான டெஸ்ட் தொடர் தோல்வியை சந்தித்தது. அவுஸ்திரேலிய அணி இலங்கை அணிக்கு வெள்ளையடிப்பு (White Wash) செய்து தொடரை தனதாக்கியது. இந்தளவிற்கு இலங்கை அணியை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. உபாதைகள் மிகப் பெரியளவில் இலங்கை அணிக்கு பாதிப்பை தந்தன. ஏற்றுக் கொள்ளகூடியது என்றாலும் முதற்ப் போட்டியில் உபாதைகள் பெரியளவில் தாக்கத்தை ஏற்ப்படுத்தவில்லை. மோசமான பெறுதிகள். இறுதிப் போட்டியில் உபாதைகள் முழுமையான பாதிப்புக்களை தந்த பின் ஓரளவு போராடக்கூடிய நிலை இருந்தது. அல்லது இலங்கை அணி தோல்வியடைந்தாலும் மோசமான தோல்வி என்று சொல்வதற்கில்லை. ஆனாலும் தொடர்ச்சியான ஓர் அணி விளையாடி இருக்கும் என்றால் அணி சமநிலை, காலநிலை மாற்றங்கள் என்பன பழக்கப்பட்டு இருக்கும். தொடர்ந்து செயற்பட்டு இருக்க முடியும். ஆனால் அது இல்லாமல் போய்விட்டது.

துடுப்பாட்டம் மிக மோசமாகப் போனது இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது. குறிப்பாக திலான் சமரவீர மிகப் பெரியளவில் ஏமாற்றினார். இறுதிப் போட்டியில் அவர் ஆட்டமிழந்தவிதம் இவர் இனி அணிக்கு தேவைதானா? என்ற கேள்வியை எழுப்புமளவுக்கு இருந்தது. எதிர்பார்க்கப்பட்ட இலங்கையின் மூத்த நான்கு வீரர்களுமே ஏமாற்றி விட்டார்கள் என்றே சொல்லலாம். டில்ஷான் மீது நம்பிக்கை மிகக் குறைவாக இருக்க முதற்ப் போட்டியில் சதம் அடித்து நம்பிக்கையூட்டினார். அதற்க்கு பின் எதுவும் செய்யவில்லை. குமார் சங்ககார ஓரளவு பிரகாசித்தார் என்றே சொல்லலாம். முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸை தவிர அரைச் சதங்களை பெற்றார். இருப்பினும் இரண்டாவது போட்டியின் இரண்டாம் இன்னிங்சில் விரல் முறிவு ஏற்ப்பட்டது. அத்துடன் அவரின் துடுப்பாட்டம் நின்று போனது. மஹேல ஜெயவர்தன 6 இன்னிங்க்ஸ் துடுப்பெடுத்தாடி இரண்டு அரைச் சதங்களை மாத்திரமே பெற முடிந்தது. இளைய வீர்கள் கொஞ்சம் நம்பிக்கையூட்டும் விதமாக துடுப்பெடுத்தாடியது எதிர்கால இலங்கை அணி தயாராகிறது என்பது தெரிந்தது. திமுத் கருனாரட்ன, லஹிறு திரிமன்னே, தினேஷ் சந்திமால், மற்றும் எதிர்கால தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் ஆகியோரே அவர்கள். 


நுவான் குலசேகர, முதல் போட்டியில் விக்கெட்களைக் கைப்பற்றாமலே உபாதையடைந்தார். சானக்க வெலிகெதெர சிறப்பாக பந்துவீசி விக்கெட்களைக் கைப்பற்றி நம்பிக்கையூட்டினாலும் அவரும் உபாதையடைந்தார். சமின்ட எரங்க, தம்மிக்க பிரசாத், நுவான் பிரதீப் போன்றவர்கள் நம்பிக்கையூட்டும் முகமாக பந்துவீசினாலும் அவுஸ்திரேலியாவின் விக்கெட்களை தகர்க்கும் வகையில் அல்லது அச்சுறுத்தும் வகையில் இல்லை. அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டத்தில் 2 தடவைகள் சகல விக்கெட்களும் வீழ்த்தப்பட்டன. ஒரு தடவை 9 விக்கெட்களும், இரு தடவைகள் 5 விக்கெட்களும் வீழ்த்தப்பட்டன. இதில் ரங்கன ஹேரத்தின் பங்கு முக்கியமாக அமைந்தது. கூடுதலான விக்கெட்களை இலங்கை அணி சார்பாக கைப்பற்றியவர் அவரே. ஆக இலங்கை அணியின் பந்து வீச்சில் மிகப் பெரியளவில் குறை கூறி விட முடியாது. சிறப்பாக துடுப்பாடியிருந்தால் குறைந்தது சமநிலை நோக்கியாவது சென்று இருக்க முடியும். போதிய பயிற்சிப் போட்டிகள் இல்லாமை இன்னும் ஒரு காரணமாக சொல்ல முடியும். மூன்று டெஸ்ட் போட்டிகள், 5 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளிற்கான தொடருக்கு சொன்று ஒரு பயிற்சிப் போட்டியில் மாத்திரம் விளையாடுவது ஆடுகள தன்மை, காலநிலை தன்மை என்பனவற்றை கணிக்க போதுமானதாக அமையாது.

இலங்கை அணியின் தலைவர் இந்த தொடருடன் அணித்தலைவர் பதவியில் இருந்து விலகுகின்றார். அஞ்சலோ மத்தியூஸ் தயார் என சொல்லி வரும் நிலையில் மூத்த வீரகளை சமாளித்து சரியாக செயற்பட வேண்டிய பொறுப்பு அவர் வசம் வந்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் தான் பெரிய பொறுப்பு அவர் பக்கமாக வந்துள்ளது. இந்த வருட ஆரம்பம் மிகப் பெரிய அடியுடன் இலங்கை அணிக்கு ஆரம்பித்துள்ளது. இந்த வருடம் இலங்கை அணியின் வீரர்கள் மாற்றங்கள் நடைபெறப்போகும் வருடமாக இருக்கும். அவற்றில் இருந்து இலங்கை அணி விடுபட்டு சரியாக தன்னை உருவாக்க வேண்டிய கால கட்டம். அடுத்த டெஸ்ட் தொடர் இலங்கையில் வைத்து பங்களாதேஷுடன். மூத்த வீரர்கள் போட்டி போட்டு ஓட்டங்களை குவிக்கும் தொடராக இதை பாவிக்காமல் இள வயது வீரர்களை இனம் காண, அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்க பாவித்தால் அது ஆரோக்கியமானதாக இருக்கும்.


அவுஸ்திரேலிய அணி முழுமையான ஆதிக்கம் செலுத்தி இந்த தொடரை வெற்றிபெற்றுவிட்டது. ரிக்கி பொன்டிங் முழுமையாக விலகிய பின், மைக்கல் ஹசியின் இறுதித் தொடர் இது என்ற நிலையில் அவுஸ்திரேலிய அணி சகலதுறையிலும் சிறப்பாக செயற்பட்டு வெற்றி பெற்றுள்ளது. வீரர்கள் வெளியே போனாலும் கூட அதை பற்றி கவலை இல்லாமல் விளையாடி வெற்றி பெறும் தன்மை கொண்டது அவுஸ்திரேலிய அணி. அதை நிரூபித்து காட்டிவிட்டார்கள். இந்த தொடரில் இலங்கை அணியின் விக்கெட்களை இலாபகரமாக சரிக்கக்கூடிய பலமான பந்து வீச்சு அமைந்தது அவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இலங்கை அணி ஓர் இன்னிங்சில் தானும் சகல விக்கெட்கள் இழப்பு என்ற நிலையில் இருந்து தப்பிக்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர்களின் பௌன்சர் உடன் கூடிய ஸ்விங் கதி கலங்க வைத்தது. 48 விக்கெட்கள் வேகப் பந்து வீச்சில் வீழ்த்தப்பட்டன. 7 விக்கெட்கள் மாத்திரமே சுழல்ப் பந்து வீச்சுக்கு பறி போயின. மிகுதி 5 விக்கெட்களில் 3 விக்கெட்கள் உபாதை காரணமாக இரண்டாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் பறிபோயின. வோர்ன் - முரளி கிண்ணம் என பெயரிடப்பட்டுள்ள தொடரில் பாவம் சுழல்ப் பந்து வீச்சாளர்கள். விக்கெட்களை எடுக்க மிகுந்த சிரமமப்படுகின்றனர். துடுப்பாட்டத்தில் மிக இலகுவாக அவுஸ்திரேலிய அணி ஓட்டங்களை குவித்தது, இதற்கு முக்கிய காரணமாக அழுத்தங்கள் எதுவும் அவர்களுக்கு இருக்கவில்லை. தோல்வியை சந்திப்போம், போராட வேண்டும் என்று எதுவுமே கிடையாது. இலங்கை அணி பெற்றுக்கொண்ட குறைந்த ஓட்டங்களை தாண்டுவதில் சிக்கல்கள் இருக்காது என்ற நிலையில் மிக இலாபகரமாக துடுப்பாடி ஓட்டங்களை குவித்தனர். எனவே வெற்றிகள் அவர்களுக்கு இலகுவாக கிடைத்தது.


கூடுதலான ஓட்டங்களை பெற்றவர்கள்
மைக்கல் கிளார்க்                      3    5    316      16         79.00     62.57    1    3
டேவிட் வோர்னர்                      3    5    272      85         54.40     80.23    0    4   
பில் ஹியூஸ்                              3    5    233       87        46.60      54.82    0    2
மைக்கல் ஹஸி                        3    5    232    115*    116.00      60.57    1    0   
திலகரட்ன டில்ஷான்              3    6    208    147        34.66      53.06    1    0
மத்தியூ வேட்                              3    5    191    102*       63.66      57.70    1    1   
அஞ்சலோ மத்தியூஸ்             3    6    175      75        29.16      46.17    0    1
மஹேல ஜெயவர்தன             3    6    166      72        27.66      44.98    0    2
குமார் சங்ககார                          2    4    152      63        50.66      39.68    0    2
திமுத் கருனாரட்ன                  3    6    140      85        23.33      53.43    0    1
எட் கொவன்                                3    5    136      56        27.20      40.84    0    1
ஷேன் வொட்சன்                      2    3    118      83         39.33     42.75    0    1
மிச்செல் ஜோன்சன்                 2    3    106      92*    106.00      54.35    0    1
(வீரர்கள், போட்டிகள், இன்னிங்க்ஸ், ஓட்டங்கள், கூடுதலான ஓட்டங்கள், சராசரி, ஸ்ட்ரைக் ரேட்)

கூடுதலான விக்கெட்களைக் கைப்பற்றியவர்கள்
பீற்றர் சிடில்                          3    6       96.5    254    15      54/5    16.93    2.62
ரங்கன ஹேரத்                    3    5    134.4    407    12       95/5    33.91    3.02
ஜக்சன் பேர்ட்                        2    4      63.0    178    11       41/4    16.18    2.82   
மிச்சேல் ஸ்டார்க்               2    4      83.2    287    10       63/5    28.70    3.44
மிச்சேல் ஜோன்சன்           2    4      50.0    171      9       63/4    19.00    3.42
நேதன் லயோன்                  3    6      98.4    307      7       23/2    43.85    3.11
சானக்க வெலிகெதெர      2    3      62.4    257      6       89/3    42.83    4.10
சமின்ட எரங்க                      2    3      63.0    252      5    109/3     50.40    4.00
(வீரர்கள், போட்டிகள், இன்னிங்க்ஸ், ஓவர்கள், ஓட்டங்கள், விக்கெட்கள், சிறந்த பந்துவீச்சு, சராசரி, ஓவருக்கு வழங்கிய சராசரி ஓட்டங்கள்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .