Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 08 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ச.விமல்
இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிக்கின்றது. இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒரு நாள் சர்வதேசப்போட்டிகள், இரண்டு 20-20 போட்டிகள் நடைபெறவுள்ளன. போட்டிகள் ஒரு மாத காலத்திற்கும், தொடர் கிட்டத்தட்ட 45 நாடகளுமாக அமைந்துள்ளது. இலங்கை அணியைப் பொறுத்தளவில் மிகக்கடினமான தோடர் இது. ஆனால் மீண்டும் ஒரு புதிய அணி சிறப்பாக உருவாகி வருவது இந்த தொடரில் நியூசிலாந்து அணிக்கு சவாலாக அமையும் எனக் கூற முடியும். அனுபவமற்ற புதிய வீரர்கள் நியூசிலாந்து ஆடுகளங்களில் விளையாடுகின்றனர் என்பது மட்டுமே முக்கிய விடயம். ஆனால் அணியில் இடம் பெற்றுள்ள புதிய வீரர்கள் அண்மையில் நியூசிலாந்தில் விளையாடியுள்ளனர் என்பது இலங்கை அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் உள்ளது. குறிப்பாக அணிக்குள் புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள உதார ஜெயசுந்தர, குஷால் மென்டிஸ், மிலிந்த சிறிவர்த்தன ஆகியோர் இலங்கை A அணிக்காக விளையாடியுள்ளனர். இந்த வருட ஆரம்பத்தில் அதாவது உலகக்கிண்ண தொடருக்கு முன்னதாக இலங்கை அணி நியூசிலாந்தில் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. மீண்டும் அதே வருடத்தில் அங்கே விளையாடுவது நல்ல அனுபவத்தை தரும். அப்போதைய தொடரில் விளையாடியுள்ள வீரர்களில் இருந்து குமார் சங்ககார, லஹிறு திரிமான்னே, பிரசன்ன ஜெயவர்தன ஆகியோர் முக்கிய வீரர்களில் இல்லை. தம்மிக்க பிரசாத்தும் உபாதை காரணமாக அணியில் இருந்து விலகி விட்டார். இது இலங்கை அணிக்கு மிகப் பெரிய அடியாக அமைந்து விட்டது. டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்கு இந்த வருடத்தில் அதிக விக்கெட்களைக் கைப்பற்றிக் கொடுத்தவர். நியூசிலாந்து தொடரில் நிச்சயம் சாதித்துக் காட்டி இருப்பார். இலங்கை குழுவில் உள்ள வீரர்களும் அங்கே சென்று அணியுடன் இருந்தமையும் அவர்களுக்கு அங்குள்ள ஆடுகளங்களின் நிலைமை, காலநிலை என்பன பழக்கமாகியுள்ளமை இலங்கை அணிக்கு சாதக தன்மைகளை வழங்கும்.
நியூசிலாந்து அணி அன்மைக்காலமாக பலமாக தன்னுடைய பெறுதிகளைக் காட்டி வருகின்றது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மூன்று போட்டிகள் அடங்கிய தொடரில் 0-2 என தோல்வியடைந்த போதும் இரண்டாவது போட்டியில் சமநிலை முடிவை ஏற்படுத்தியது. மூன்றாவது போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பைக் கொண்டு இருந்தது. இறுக்கமான போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. துடுப்பாட்டம், பந்துவீச்சு என அணி சமநிலையாக'இருக்கின்றது. நியூசிலாந்து மைதானங்கள் சிறியனவாக இருக்கின்ற போதும் ஆடுகளங்கள் மற்றைய நாடுகளை விட வித்தியாசமானதாக இருக்கும் ஓட்டங்களை பெறுவது மிகக் கடினம் எனவும் பொதுவாக வர்ணிக்கப்படுவது உண்டு. எனவே தங்கள் ஆடுகளங்களில் மிகச் சிறந்த அணியாக நியூசிலாந்து அணி செயற்படுவது உண்டு. ஆனாலும் இலங்கை அணி நியூசிலாந்தில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 1 தொடர் வெற்றியையும் பெற்றுள்ளது. எனவே இலங்கை அணி சவால்களை வழங்கும் என்று கூற முடியும்.
அணி விபரம் - இலங்கை அணி
திமுத் கருனாரட்ன, உதார ஜெயசுந்தர, குஷால் மென்டிஸ்(விக்கெட் காப்பாளர்), தினேஷ் சந்திமால், அஞ்சலோ மத்தியூஸ்(தலைவர்), மிலிந்த சிறிவர்த்தன, கித்ருவான் விதானகே, ரங்கன ஹேரத், துஸ்மாந்த சமீர, சுரங்க லக்மால், நுவான் பிரதீப், விஸ்வ பெர்னாண்டோ, டில்ருவான் பெரேரா, ஜெப்ரி வன்டேர்சி, கெளசால் சில்வா.
இலங்கை அணியில் முதல் 11 வீரர்களும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவார்கள் என நம்ப முடியும். கித்ருவான் விதானகே, குஷால் மென்டிஸ் ஆகியோரில் யார் மூன்றாமிடத்தில் களமிறங்கப் போகின்றனர் என்பது முக்கிய கேள்வி. கடந்த தொடரில் அறிமுகத்தை மேற்கொண்ட குஷால் மென்டிஸ் இன்னமும் நல்ல பெறுபேறுகளைக் காட்டவில்லை. அத்துடன் நடைபெற்ற பயிற்சிப்பொடியில் கித்ருவான் விதானகே அரைச்சதம் அடித்து தனது போர்மை நிரூபித்துக்காட்டியுள்ளார். ஆனால் குஷால் ஜெனித் பெரேரா தடை செய்யப்பட்ட மருந்தை அருந்தினார் என்ற குற்றச்சாட்டின் படி அணியை விட்டு விலக்கப்பட்டுள்ளார். இதுவும் இலங்கை அணிக்கு பின்னடைவே. அவரின் இடத்துக்கு அணியால் நீக்கப்பட்ட கௌஷால் சில்வா இணைக்கப்பட்டுள்ளார். இவர் விக்கெட் காப்பாளராக அணியில் இடம் பிடித்து எழாமிடத்தை பெறுவாரா அல்லது தினேஷ் சந்திமால் விக்கெட் காப்பாளராக கடமையாற்றி குஷால் மென்டிஸ், உதார ஜெயசுந்தர ஆகியோர் விளையாடுவார்களா அல்லது குஷால் மென்டிஸ் விக்கெட் காப்பாளராக கடமையாற்றுவாரா என பல குழப்பங்கள் உள்ளன. மத்தியூஸ் என்ன முடிவை எடுக்கின்றார் என்பது போட்டி ஆரம்பிக்கும் வேளையில் தெளிவாகும். உதார ஜெயசுந்தர பயிற்சிப்போட்டியில் அரைச்சதம் அடித்து தனது அறிமுகத்தை உறுதிப்படுத்தியுள்ளார். அனாலும் கெளசால் சில்வா அணிக்குள் மீண்டும் வந்துள்ளமையே ஒரு சிறிய குழப்ப நிலையை ஏற்படுத்தியுள்ளது. இல்லை அவர் இறுதி பதினொருவர் அடங்கிய அணியில் இடம் பிடிக்க மாட்டார் என்றால் பெரிதாக குழப்பமில்லை. தினேஷ் சந்திமால் விக்கெட் காப்பு பக்கம் மீண்டும் செல்லக்கூடாது. தெரிவுக்குழுவினரும் அதை விரும்பாமையினால் தான் விக்கெட் காப்பாளர் கெளசால் சில்வாவை மேலதிக விக்கெட் காப்பாளராக இணைத்துள்ளனர் என நம்ப தோன்றுகின்றது.
பந்துவீச்சில் பெரிய சிக்கல் நிலை இல்லை. சுரங்க லக்மால், நுவான் பிரதீப் ஆகியோருக்கு இடையில் இருந்த போட்டி தம்மிக்க பிரசாத் அணியால் விலகியதை தொடர்ந்து இல்லாமல் போய் விட்டது. துஸ்மாந்த சமீரா இலங்கை அணிக்கு நம்பிக்கை தரக்கூடியவராக மாறி வருகின்றார். பயிற்சிப்போட்டியிலும் மூன்று விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். அஞ்சலோ மத்தியூஸ் நான்காவது வேகப்பந்து வீச்சாளர். மத்தியூஸ் அதிகளவில் நியூசிலாந்து ஆடுகளங்களில் பந்துவீச வேண்டும். அது இலங்கை அணிக்கு மிகப்பெரியளவில் கை கொடுக்கும். ஆனால் மத்தியூஸ் துடுப்பாட்டத்துக்கே அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றார், நியூசிலாந்து போன்ற ஆடுகளங்களில் இவரின் பந்துவீச்சு மிகசிறப்பாக அமையும். சுழற் பந்து வீச்சில் ரங்கன ஹேரத் நிச்சயம். மிலிந்த சிறிவர்த்தன இரண்டாவது சுழற் பந்து வீச்சாளர். கித்ருவான் விதானகே விளையாடினால் அவரும் சுழற் பந்து வீச்சாளர்.
ஆக இலங்கை அணி எழுத்து வடிவில் மிகச்சிறந்த சமபலம் உள்ள அணி. 5 துடுப்பாட்ட வீரர்கள். ஒரு வேகப்பந்து வீசும் சகலதுறை வீரர். ஒரு சுழற் பந்துவீசும் சகலதுறை வீரர். 4 பந்துவீச்சாளர்கள். இவ்வாறு ஒரு அணி யாருக்கு அமையும். இந்த பலத்தை சரியாக பாவித்தால் நியூசிலாந்து அணியை வெற்றி பெறக் கூடிய அளவுக்கு இலங்கை அணி போரடாலம்.
நியூசிலாந்து அணி
முதற் போட்டிக்கான 12 வீரர்களை மாத்திரமே அறிவித்துள்ளது.
மார்டின் கப்தில், ரொம் லதாம்,கேன் வில்லியம்சன், ரொஸ் ரெய்லர், பிரண்டன் மக்கலம்(தலைவர்), மிட்செல் சன்ட்னர், பிரட்லி ஜோன் வட்லிங்(விக்கெட் காப்ப்ளார்), மார்க் கிரெய்க், டக் பிரஸ்வெல், ரிம் சௌதி, ரென்ட் பௌல்ட், நெய்ல் வக்னர்.
பலமான தொடர்ச்சியான அணி. மிட்செல் சன்ட்னர் ஆஸ்திரேலியாவில் அறிமுகத்தை மேற்கொண்ட வீரர். மார்க் கிரெய்க் அடுத்த அனுபவம் குறைந்த வீரர் என்றாலும் சுழற்பந்து வீச்சாளராக அணியில் நிச்சய இடம் பிடித்துள்ள ஒருவர். இவரை ஒரு நல்ல சகலதுறை வீரராக வர்ணிக்க முடியும். துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்படுகின்றார். பந்துவீச்சு இன்னும் முன்னேற்றம் தேவை. இடதுகர சுழற்பந்துவீச்சாளர். எனவே இலங்கை அணி பெரியளவில் இவர் அச்சுறுத்தலாக இருக்க மாட்டார். ஆனால் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் இலங்கை அணிக்கு மிகப்பெரியளவில் அச்சுறுத்தலே. ரென்ட் பௌள்ட் போர்மில் உள்ளார். ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக பந்து வீசி இருந்தார். சௌதி, பிரஸ்வெல் ஆகியோரும் சிறந்த அனுபவமிக்க பந்துவீச்சாளர்கள். இவர்களை இலங்கை துடுப்பாட்ட வீரர்களினால் சமாளிக்க முடியுமானால் தொடரை இலகுவாக சமநிலையாக முடிக்க முடியும்.
நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டம் பலமானது. ஆரம்ப துடுப்பாட்டம் பலமானதே. ஆனாலும் அண்மைக்காலமாக பெரியளவில் மார்டின் கப்தில், ரொம் லதாம் ஆகிய இருவருமே பிரகாசிக்கவில்லை. அவர்களை போர்முக்கு வர விடாமல் தடுக்க வேண்டும். அடுத்த இடம் கேன் வில்லியம்சன். தற்காலத்தில் உள்ள சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் முக்கியமானவர். இவரை டெஸ்ட் போட்டிகளில் ஓட்டங்கள் பெறாமல் தடுபப்து கடினமே. ஆஸ்திரேலியா அணியுடனான அபாரமான தொடர் ஒன்றை நிறைவு செய்து போர்மில் உள்ளார். இவர் இலங்கை அணிக்கு மிகப் பெரிய சவால். இவரை இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் குறி வைத்து பந்து வீசி வீழ்த்த வேண்டும். அடுத்த இடமான ரொஸ் ரெய்லர் இன்னும் ஒரு முக்கிய துரும்புச்சீட்டு. ஆஸ்திரேலியா அணியையே ஆட்டம் காண வைத்த ஒருவர். ஒரு
வடுத்தக்கு பின்னர் அடித்த சதம் இரட்டைசதமாக மாறியது. மிகப் பெரிய ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றுள்ளார். இவரை இலங்கை அணிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் எனக்கூறிவிட முடியாது. ஆனால் ஆடுகளத்தில் நிலைக்க விட்டால் அது இலங்கை அணிக்கு தலையிடியே. அணித்தலைவர் பிரண்டன் மக்கலம் அதிரடி வீரர். இவரை அச்சுறுத்தும் வீரராக கருதாமல் இவருக்கு அழுத்தங்களை வழங்கினால் இவரை ஆட்டமிழக்க செய்ய முடியும். இவருக்கான பலவீனப்புள்ளிகள் உள்ளன. அதை சரியாக பந்துவீச்சாளர்களும், தலைவரும் கணித்து பந்துவீசி களத்தடுப்பு வியூகங்களை அமைத்தால் ஆட்டமிழக்க செய்ய முடியும். அடுத்த வீரரான மிட்செல் சன்ட்னர் புதிய வீரர், நியூசிலாந்து அணி இவர் மீது நம்பிக்கை வைத்துள்ளது. சுழற்பந்து வீசும் சகலதுறை வீரர். விக்கெட் காப்பாளர் வோட்லிங் பரவாயில்லை ரகம். விக்கெட் காப்பில் சிறப்பக செயற்படும் இவர் துடுப்பாட்டதிலும் பிரகாசிக்கக்கூடியவர்.
1982 ஆம் ஆண்டு இலங்கை, நியூசிலாந்துக்கு சென்றதன் மூலம் இரு அணிகளுக்கும் இடையில் டெஸ்ட் தொடர் ஆரம்பமானது. இதுவரை இரு அணிகளும் 14 தொடர்களில் மோதியுள்ளன, இவற்றில் இலங்கை அணி 4 தொடர்களில் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி 5 தொடர்களில் வெற்றி பெற்றுள்ளது. 5 தொடர்கள் சமநிலையில் முடிவடைந்துள்ளன. நியூசிலாந்தில் நடைபெற்ற தொடர்களில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது என்பது முக்கிய விடயம். இலங்கையின் பொற்காலம் என வர்ணிக்கப்படும் காலத்தில் அந்த தொடர் வெற்றி கிடைத்துள்ளது. உலக கிண்ண வெற்றிக் முன்னர் அந்த வெற்றி கிடைத்தது. 7 தொடர்கள் இரு அணிகளுக்குமிடையில் நியூசிலாந்தில் நடைபெற்றுள்ளது. இதில் இலங்கை அணிக்கு ஒரு தொடர் மட்டுமே வெற்றி. 4 தொடர்களில் நியூசிலாந்து அணிக்கு வெற்றி. இரு தொடர்கள் சமநிலையில் நிறைவடைந்தன. இலங்கை அணி நியூசிலாந்தில் 2 போட்டிகளில் வென்றுள்ளன. நியூசிலாந்து அணி 8 போட்டிகளில் வென்றுள்ளன. 15 போட்டிகளில் 5 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன. இரு அணிகளுக்குமிடையில் 30 போட்டிகள் நடைபெற்றுள்ளன. 12 போட்டிகளில் நியூசிலாந்து அணியும், 8 போட்டிகளில் இலங்கை அணியும் வென்றுள்ளன. 10 போட்டிகளில் சமநிலை முடிவு கிடைக்கப்பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் இரு அணிகளுக்குமிடையில் நியூசிலாந்தில் வைத்து கூடுதலான ஓட்டங்களைப் பெற்றவரக்ள்.
அரவிந்த டி சில்வா (இலங்கை) 1991-1997 7 13 595 45.76 2 2
குமார் சங்ககார (இலங்கை) 2005-2015 6 11 549 61.00 3 0
அசங்க குருசிங்க (இலங்கை) 1991-1995 5 9 535 59.44 3 2
அன்று ஜோன்ஸ் (நியூசிலாந்து) 1991-1991 3 6 513 102.60 3 1
பிரையன் ஜங் (நியூசிலாந்து) 1995-1997 4 7 433 86.60 1 2
ஸ்டீபன் பிளமிங் (நியூசிலாந்து) 1995-2006 8 13 433 33.30 0 4
(போட்டிகள், இன்னிங்ஸ், மொத்த ஓட்டங்கள், சராசரி, சதம், அரைச் சதம் )
பிரண்டன் மக்கலம் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் 400 ஓட்டங்களை அண்மித்துள்ளனர்.
பந்து வீச்சில் இரு அணிகளுக்குமிடையில் நியூசிலாந்தில் வைத்து கூடுதலான விக்கெட்களைக் கைப்பற்றியவர்கள் .
சமிந்த வாஸ் (இலங்கை) 1995-2006 8 14 6/87 36 22.55
முத்தையா முரளிதரன் (இலங்கை) 1995-2006 6 9 6/87 30 19.96
டானியல் வெட்டோரி (நியூசிலாந்து) 1997-2006 4 7 7/130 21 19.71
லசித் மாலிங்க (இலங்கை) 2005-2006 4 7 5/68 20 27.10
டனி . மோரிசன் (நியூசிலாந்து) 1991-1995 4 7 5/153 19 28.85
ருமேஸ் ரத்நாயக்க (இலங்கை) 1983-1991 5 9 5/77 20 33.60
போட்டிகள், இன்னிங்ஸ், விக்கெட்கள், இன்னிங்ஸ் சிறந்த பந்துவீச்சு, சராசரி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago