Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 02 , மு.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ச.விமல்
சமபலமாக உள்ள அயல் நாட்டு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் அடங்கிய தொடர் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. உலகக்கிண்ணத்தின் இறுதிப்போட்டி அணிகள் இரண்டும் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் விளையாடும் போட்டிகள், போட்டித்தன்மை மிக்கவையாக மாறியுள்ளன. நியூசிலாந்து அணி, ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் பலமான நிலையிலேயே உள்ளது.
இந்த வருடத்தில் ஏற்கெனவே இரண்டு அணிகளும் மோதியுள்ளன. நியூசிலாந்தில் நடைபெற்ற மூன்று போட்டிகள் அடங்கிய தொடரில், 2-1 என்ற ரீதியில் நியூசிலாந்து அணி வென்றிருந்தது. இறுதியாக இந்தியாவில் நடைபெற்ற தொடரிலும் நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடியது. தொடரில் தோல்வியைச் சந்தித்தாலும், இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது.
இந்த வருடத்தில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி ஏழு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. நான்கு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது. ஒரு போட்டி கைவிடப்பட்டது. எந்த அணிகளுக்கும், எந்த மைதானங்களிலும் அச்சுறுத்தும் அணியாக திகழும் நியூசிலாந்து அணி, அவுஸ்திரேலியா அணியை வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகமுள்ளன.
அவுஸ்திரேலியா அணி உலக சம்பியனாக இருந்தாலும், அண்மைக் காலமாக போதியளவு சிறப்பாகச் செயற்படவில்லை. இந்தாண்டு 26 போட்டிகளில் விளையாடியுள்ள அவுஸ்திரேலியா அணி, 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 11 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது. ஒரு போட்டி கைவிடப்பட்டது.
தென்னாபிரிக்கா அணியுடனான ஒரு நாள் சர்வதேச போட்டித் தொடரில் வெள்ளையடிப்புச் செய்யப்பட்டு ஐந்து போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்தது. அதற்கு முன்னர் இலங்கை அணியை இலங்கையில் வைத்து 4-1 என்ற ரீதியில் வெற்றி பெற்றது. அண்மைக்கால தோல்விகள், இவர்களை தடுமாற வைத்துள்ளது. அழுத்தத்துடன் இந்த தொடரில் களமிறங்கவுள்ளனர். எப்படியாவது வெல்லவேண்டும் என்ற நிலை உள்ளது. இல்லாவிட்டால் அணித் தலைவர், வீரர்கள் என சிலருக்கு சாவு மணி காத்திருக்கின்றது எனக்கூறலாம். இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் தொடர் இவர்களுக்கு கடினமாக அமைய வாய்ப்புகள் உள்ளன.
அவுஸ்திரேலியா அணி தரப்படுத்தலில் முதலிடத்தை இழக்குமா என்ற நிலை உள்ளது. நியூசிலாந்து அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால், அவுஸ்திரேலியா அணி இரண்டாமிடத்துக்கு பின்தள்ளபப்டும். ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும், முதலிடத்தை அவுஸ்திரேலியா அணி தக்க வைத்துக்கொள்ளும். மூன்றாமிடத்திலுள்ள நியூசிலாந்து அணி , மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அவுஸ்திரேலியா அணியுடன் இணைந்து 115 புள்ளிகளைப் பெறும். நியூசிலாந்து அணி எந்த முடிவை பெற்றாலும் அவர்களின் இடத்தில் மாற்றம் ஏற்படாது. ஆனால் புள்ளிகளில் மட்டும் மாற்றம் ஏற்படும்.
ஒரு நாள் சர்வதேசப் போட்டி தரப்படுத்தல்
1 அவுஸ்திரேலியா 51 6023 118
2 தென்னாபிரிக்கா 52 6024 116
3 நியூசிலாந்து 46 5133 112
4 இந்தியா 53 5891 111
5 இங்கிலாந்து 54 5804 107
6 இலங்கை 60 6056 101
7 பங்களாதேஷ் 30 2840 95
8 பாகிஸ்தான் 51 4555 89
9 மேற்கிந்தியத் தீவுகள் 37 3168 86
10 ஆப்கானிஸ்தான் 26 1341 52
11 சிம்பாப்வே 50 2409 48
12 அயர்லாந்து 20 834 42
இரு அணிகளும் 130 போட்டிகளில் மோதியுள்ளன. இவற்றில் அவுஸ்திரேலியா அணி 87 போட்டிகளிலும், நியூசிலாந்து அணி 37 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆறு போட்டிகள் கைவிடப்பட்டுள்ளன.
ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது அவுஸ்திரேலியா அணி மிகப்பலமாகவே இருந்து வந்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் நியூசிலாந்து அணி மிகப் பலமாக மாறியுள்ளது. இதுதான் அவுஸ்திரேலியா அணிக்கான பெரிய சவால். அந்தச் சவாலை எப்படி முறியடிக்கப் போகின்றார்கள் என்பது முக்கிய விடயம். அவுஸ்திரேலிய அணியைப் பார்த்ததும் பயந்து போய் அழுத்தத்துக்கு உள்ளாகும் அணிகளில் நியூசிலாந்து அணியும் முக்கியமானதே. அந்த அழுத்தம் மட்டுமே நியூசிலாந்து அணியை பொறுத்தளவில் பின்னடைவைத் தரும் விடயம். இரண்டு அணிகளதும் அண்மைய பெறுபேறுகளை பார்க்கும்போது நியூசிலாந்து அணிக்கு இந்தத் தொடரில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகமுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
3 hours ago
4 hours ago
4 hours ago