Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
A.P.Mathan / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகக் கிண்ண ரக்பி தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ளன. உலகின் முதல் பலமான 8 அணிகளுமே காலிறுதிப்போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளன. காலிறுதிப் போட்டிகள் அதிக விறுவிறுப்பைத் தரப்போகின்றன.
குழு A
அணி போ வெ ச தோ த.பு எ.பு பு.வி ஊ.பு பு
அவுஸ்திரேலியா 4 4 0 0 141 35 +125 1 17
வேல்ஸ் 4 3 0 1 111 62 +49 1 13
இங்கிலாந்து 4 2 0 2 133 75 +58 3 11
பிஜி 4 1 0 3 84 101 -17 1 5
உருகுவே 4 0 0 4 30 226 -196 0 0
போட்டி முடிவுகள் -
இங்கிலாந்து 35 - 11 பிஜி
வேல்ஸ் 54 - 9 உருகுவே
அவுஸ்திரேலியா 28 - 13 பிஜி
இங்கிலாந்து 25 - 28 வேல்ஸ்
அவுஸ்திரேலியா 65 - 3 உருகுவே
வேல்ஸ் 23 - 13 பிஜி
இங்கிலாந்து 13 - 33 ஆஸ்திரேலியா
பிஜி 47 - 15 உருகுவே
அவுஸ்திரேலியா 15 - 6 வேல்ஸ்
இங்கிலாந்து 60 - 3 உருகுவே
குழு A இல் எந்த வித அதிர்ச்சி முடிவுகளும் கிடைக்கவில்லை. எதிர்பார்த்த அணிகள் அதே ஒழுங்கில் வென்றுள்ளன. அவுஸ்திரேலியா அணி ஆரம்ப காலம் முதல் பலமான அணி. முதலிடத்தைப் பெற்றுள்ளது. அதுவும் போட்டிகளின் புள்ளிகள் வித்தியாசம் 125. ஒவ்வொரு போட்டிகளிலும் பெரிய வித்தியாசத்தில் வென்றுள்ளது. சகல போட்டிகளிலும் வென்று 1 போணஸ் புள்ளி அடங்கலாக 17 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை தனதாக்கிக் கொண்டது. இரண்டாமிடத்தை வேல்ஸ் பெற்றுக்கொண்டது. இங்கிலாந்து ஆடுகள சார்புத்தன்மை, ரசிகர்களின் ஆதரவு அதிகளவு இருந்தும் கூட முதலிடத்தைப் பெறமுடியவில்லை. 3 வெற்றிகளுடன் 1 போணஸ் புள்ளி அடங்கலாக 13 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தை பெற்றது. போட்டிகளை நடாத்தும் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, வேல்ஸ் நாடுகளுடன் தோல்வியடைந்து அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளது.
குழு B
அணி போ வெ ச தோ த.பு எ.பு பு.வி ஊ.பு பு
தென் ஆப்பிரிக்கா 4 3 0 1 176 56 +120 4 16
ஸ்கொட்லாந்து 4 3 0 1 136 93 +43 2 14
ஜப்பான் 4 3 0 1 98 100 -2 0 1 2
சமோவா 4 1 0 3 69 124 -55 2 6
அமெரிக்கா 4 0 0 4 50 156 -106 0 0
தென் ஆப்ரிக்கா 32 - 34 ஜப்பான்
சமோவா 25 - 16 அமெரிக்கா
ஸ்கொட்லாந்து 45 - 10 ஜப்பான்
தென் ஆப்ரிக்கா 46 - 6 சமோவா
ஸ்கொட்லாந்து 39 - 16 அமெரிக்கா
சமோவா 5 - 26 ஜப்பான்
தென் ஆப்ரிக்கா 34 - 16 ஸ்கொட்லாந்து
தென் ஆப்ரிக்கா 64 - 0 அமெரிக்கா
சமோவா 33 - 36 ஸ்கொட்லாந்து
அமெரிக்கா 18 - 28 ஜப்பான்
போட்டி மிகுந்த ஒரு குழு எனக் கூறலாம். எல்லாவற்றுக்கும் காரணம் ஜப்பான். பலமான தென் ஆபிரிக்கா அணிக்கு முதற் போட்டியில் அவர்கள் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம். இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் ஜப்பான் அணி வெற்றி பெற தென் ஆபிரிக்கா அணியும், ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். ஆனால் அதற்க்கு பின்னர் தென் ஆபிரிக்கா அணி அசுரர்கள் போல எழுந்து மிகுதி மூன்று போட்டிகளிலும் பெரிய வெற்றிகளைப் பெற்று 4 போணஸ் புள்ளிகளுடன் 16 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைக் கைப்பற்றினர். ஒரு தோல்வியின் பின்னரும் தென் ஆபிரிக்கா அணியின் போட்டிப் புள்ளிகளின் வித்தியாசம் 120 என்பது பெரு வெற்றியே. தென் ஆபிரிக்கா அணியை வென்ற ஜப்பான் அணியால் ஸ்கொட்லாந்து அணியை வெல்ல முடியவில்லை. ஸ்கொட்லாந்து தென் ஆபிரிக்கா அணியிடம் தோல்வியடைந்து 3 வெற்றிகளுடன் 2 போணஸ் புள்ளிகளைப் பெற்று 14 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தைப் பெற்றது. 3 வெற்றிகளைப் பெற்ற ஜப்பான் அணியாள் போணஸ் புள்ளிகளைப் பெற முடியாமையால் போனமையே அவர்களின் வெளியேற்றத்துக்கு காரணமாக அமைந்தது. மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றும் ஜப்பான் அணியின் புள்ளிகள்'வித்தியாசம் - 2 என்பதே அவர்களின் முக்கிய இழப்பாக அமைந்தது.
குழு C
அணி போ வெ ச தோ த.பு எ.பு பு.வி ஊ.பு பு
நியூசிலாந்து 4 4 0 0 174 49 +125 3 19
அர்ஜென்டீனா 4 3 0 1 179 70 +109 3 15
ஜோர்ஜியா 4 2 0 2 53 123 -70 0 8
டொங்கோ 4 1 0 3 70 130 -60 2 6
நமீபியா 4 0 0 4 70 174 -104 8 1 1
டொங்கோ 10 - 17 ஜோர்ஜியா
நியூசிலாந்து 26 - 16 அர்ஜென்டீனா
நியூசிலாந்து 58 - 14 நமீபியா
அர்ஜென்டீனா 54 - 9 ஜோர்ஜியா
டொங்கோ 35 - 21 நமீபியா
நியூசிலாந்து 43 - 10 ஜோர்ஜியா
அர்ஜென்டீனா 45 - 16 டொங்கோ
நமீபியா 16 - 17 ஜோர்ஜியா
நியூசிலாந்து 47 - 9 டொங்கோ
அர்ஜென்டீனா 64 - 19 நமீபியா
குழு C இல் முதலிடத்தை நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. ரக்பி உலகக்கிண்ணத்திலும் சரி, ரக்பி போட்டிகளிலும் சரி மிகப்பலமான நியூசிலாந்து அணி முதலிடத்தைப் பெற்றது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இம்முறையும் உலகக்கிண்ணத்தை வெற்றி பெற அவர்களே அதிக வாய்புகள் உள்ளவர்கள். உலக பந்தயக்காரர்களின் தரப்படுத்தலிலும் கூட முதலிடம் நியூசிலாந்து அணிக்கே. குழு நிலைப் போட்டிகளில் 19 புள்ளிகளைப் பெற்று முதல் சுற்றுப்போட்டிகளிலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளது. 4 போட்டிகளில் 3 போணஸ் புள்ளிகள். போட்டிப்புள்ளிகளிலும் அதிக வித்தியாசத்தில் முதலிடம். ஆர்ஜன்டீனா அணி இரண்டாமிடம். இரண்டாமிடத்தை நியூசிலாந்து அணியுடன் தோற்று பெற்றாலும் முதல் சுற்று நிறைவில் கூடுதல் போட்டிப் புள்ளிகளைப் பெற்ற அணி. 179 புள்ளிகளைப் பெற்றுள்ளார்கள். ஆக இவர்களும் பலமான அணியே. அடுத்த மூன்று அணிகளும் அடுத்த சுற்று வாய்ப்பை நினைக்கவே முடிய இந்த இரு அணிகளும் வாய்ப்பை வழங்கவில்லை.
குழு D
அணி போ வெ ச தோ த.பு எ.பு பு.வி ஊ.பு பு
அயர்லாந்து 4 4 0 0 134 35 +99 2 18
பிரான்ஸ் 4 3 0 1 120 63 +57 2 14
இத்தாலி 4 2 0 2 74 88 -14 2 10
ருமேனியாவில் 4 1 0 3 60 129 -69 0 4
கனடா 4 0 0 4 58 131 -73 2 2
அயர்லாந்து 50 - 7 கனடா
பிரான்ஸ் 32 - 10 இத்தாலி
பிரான்ஸ் 38 - 11 ருமேனியா
இத்தாலி 23 - 18 கனடா
அயர்லாந்து 44 - 10 ருமேனியா
பிரான்ஸ் 41 - 18 கனடா
அயர்லாந்து 16 - 9 இத்தாலி
கனடா 15 - 17 ருமேனியா
இத்தாலி 32 - 22 ருமேனியா
பிரான்ஸ் 9 - 24 அயர்லாந்து
குழு D இல் அயர்லாந்து, பிரான்ஸ் ஆகிய அணிகளுக்கிடையில் முதலிடத்துக்கு போட்டி நிலவிய போதும் பிரான்ஸ், அயர்லாந்து அணிகளுக்கிடையில் குழு நிலையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றி பெற்று முதலிடத்தை தனதாக்கியது. 2 போணஸ் புள்ளிகள் அடங்கலாக 18 புள்ளிகளுடன் அயர்லாந்து அணி முதலிடத்தையும், 3 போட்டிகளில் வெற்றி பெற்று பிரான்ஸ் அணி 2 போணஸ் புள்ளிகளுடன் 14 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தைப் பெற்றது.
காலிறுதிப் போட்டி அட்டவணை
ஒக்டோபர் 17 2015
தென் ஆப்பிரிக்கா Vs வேல்ஸ்
நியூசிலாந்து Vs பிரான்ஸ்
ஒக்டோபர் 18 2015
அயர்லாந்து Vs அர்ஜென்டீனா
அவுஸ்திரேலியா Vs ஸ்கொட்லாந்து
தென் ஆபிரிக்கா, வேல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி, தென் ஆபிரிக்காவிற்க அணிக்கு சாதகமான போட்டியாகவே அமைகின்றது. கிரிக்கெட் போட்டிகளில் தென் ஆபிரிக்கா அணி இன்னும் எவ்வாறு உலகக்கிண்ணத்தை வெல்ல முடியாமல் தடுமாறுகின்றதோ அதே நிலை இங்கும் உண்டோ என்ற பயம் உள்ளது. வேல்ஸ் அணியிலும் பார்க்க தென் ஆபிரிக்கா அணியின் அரை இறுதிப் போட்டி வாய்ப்பு எல்லா விதத்திலும் அதிகமே.
நியூசிலாந்து, பிரான்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள போட்டி முழுக்க, முழுக்க நியூசிலாந்து அணிக்கு சார்பாகவே உள்ளது. மிக அரிதான வாய்ப்பே பிரான்ஸ் அணிக்கு வழங்கப்பட்டுள்ளது. நடப்பு சம்பியன் நியூ சிலாந்து அணி சம்பியன் ஆகும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில் ஓரளவு பலமான பிரான்ஸ் அணி தனக்கான போராடும் வாய்ப்பை ஏற்படுத்த முடியாமல் அமையும் வாய்ப்பு உள்ளது.
ஆர்ஜன்டீனா, அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி இந்த உலகக்கிண்ண தொடரின் மிகுந்த விறுவிறுப்பான போட்டியாக அமையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. சமபலமான அணிகள். இரு அணிகளும் அரை இறுதிப் போட்டிக்கான வாய்ப்புகளை கொண்ட அணிகள். இறுதிப் போட்டி வரையும் செல்லும் வாய்புகள் கொண்ட அணிகளும் கூட. எனவே இரு அணியும் மிக ஆவேசமாக போராடும் என நம்பலாம்.
அவுஸ்திரேலியா அணி அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் அணிகளில் அதிக வாய்ப்பு உள்ள அணியாக பந்தயக்காரர்களினால் தரப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்து அணியை எதிர்கொள்கின்றது. ஸ்கொட்லாந்து அணியும் தடுமாறியே காலிறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது. எனவே இந்த வாய்ப்பு என்பதும் ஆஸ்திரேலியாவிற்கு கிடைக்கின்றது என்பது ஆச்சரியப்படுவதற்கும் இல்லை.
அட்டவணை விளக்கம்
அணி, போட்டிகள், வெற்றி, சமநிலை, தோல்வி, தமது அணியின் போட்டிப் புள்ளிகள், எதிரணியின் போட்டிப் புள்ளிகள், புள்ளி வித்தியாசம், தமது அணிக்கான முயற்சி, எதிரணியின் முயற்சி, ஊக்குவிப்பு புள்ளிகள், புள்ளிகள்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago